பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புண்ணியம் ஆம் பாவம்போம்!

இரண்டில் எதிலாவது ஒன்றில் அல்லது இரண்டிலுமே அடிபட்டுக் கீழே விழப் போகிறோம் என்று அவருக்குத் தோன்றியது. அநியாயமாக நடுரோட்டில் சாகப் போகி றோமே என்றொரு உணர்ச்சி. அவர் உடல் நடுங்கியது.

இருட்டில் வாழ்கிற பூச்சி திடீர் செயலற்று வெளிச்சம் தாக்கியதும் திணறித் தவிப்பது போல அவரும் திண்டாடினார். இதோ மோட்டார் பைக்... இதோ ஆட்டோ மோதப் போகிறோம் -

அட பாவிகளா என்று அலற விரும்பினார் சிவசிதம்பரம். அலறிவிட்டதாக நினைத்தார். வாயை திறந்து திறந்து மூடி னாரே தவிர அவரால் எவ்விதமான ஒலியும் எழுப்ப இயல வில்லை. பயம் அவரை நிலை குலையச் செய்து விட்டது.

கிரீச்சிட்டு நின்றது ஆட்டோ. ஸ்டன் பிரேக் போட்டு திறமையாக வண்டியை நிறுத்தி விட்டார் அதன் டிரைவர்.

மோட்டார் பைக் ஆசாமி சிறிது வெட்டி முறித்துத் தன் வண்டியை விலக்கி வழியோடு சென்றார். ‘மடையன் ரோட்டிலே ஓரமாக நடக்கணுகிற அறிவு இல்லே?” என்று திட்டிக் கொண்டே பறந்து போனார். அவர் அவசரம் அவருக்கு

ஆட்டோ ரிக்ஷா டிரைவரும் ‘ஏன்யா, வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? பார்த்துப் போ என்று உபதேசித்து விட்டு, வண்டியை நகர்த்தி ஒட்டிச் சென்றார்.

சிவசிதம்பரத்தின் உடல் படபடப்பு குறையவில்லை. நெஞ்சு திக்திக்கென்று அடித்தது. ஒருவித பயம் உள்ளத்தில் நிறைந்திருந்தது. சாவு நெருங்கி வந்ததில் சிறிதளவு சந்தோஷம்கூட அப்போது அவருள் தலைகாட்டவில்லை. நல்லவேளை பிழைத்தோம் என்ற திருப்திதான் இருந்தது.

அவர் நின்று, கவனித்து, நிதானமாக ரோடு ஒரத்தில் நடக்கலானார். சாவு பற்றி சர்வ சாதாரணமாக எண்ணி