பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 புண்ணியம் ஆம் பாவம்போம்!

ராமலிங்கம் அவருடைய ஏச்சுக்களைக் கேட்கும் போதெல்லாம் குமுறுவது உண்டு. மனச் சூடு பெறுவான். தடிப்பண்ணி, எருமை மாட்டுப் பயல் சதைப் பிண்டம் என்று மனசுக்குள் அவரை திட்டிக் கொண்டே இருப்பான். நீ தான் தேவடியாமகன், பல பேருக்குப் பிறந்த பயல்’ என்று பதிலுக்கு மனசில் ஏசிவிட்டு, வழக்கம் போல் வேலைகளைக் கவனித் தவன்தான் அவன். ஆனால் நேற்று அவனாலேயே தாங்க முடியவில்லை.

ஏதோ சிறு பிசகு நேர்ந்து விட்டது. யாருக்கும் ஏற்படக் கூடியதுதான். முதலாளி அவ்விதம் எண்ணிச் சும்மா இருந்து விடவில்லை. ஏலே, துப்புக் கெட்டப் பயலே. ஒழுங்கா வலை செய்ய லாயக்கு இல்லாத பயல்லாம் எதுக்காக வலைக்கு வரணும்? நீ உடல் வளைஞ்சு உழைச்சுப் பிழைக்க ாயக்கில்லைடா, பெண்டாட்டியை கூட்டிக் கொடுத்து சுகமா வாழ்றதுக்குத்தான் லாயக்கு என்று எரிந்து விழுந்தார்.

அந்தப் பேச்சு அவனுக்கு சுரீர் என்று தைத்தது. வேறு யாராவது அப்படிச்சொல்லியிருந்தால், பேசியவன்பல் உதிர்ந்து போயிருக்கும். எதிரே இருந்தது, முதலாளி அவரை ஒன்றும் செய்ய முடியாது அவனால். எதிர்த்துப் பேசக்கூட முடியாது; தலை குனிந்து நின்றான். ஒருதரம் அவரை ஏறெடுத்துப் பாாததான,

என்னலே முறைக்கிறே? ஒழுங்கா வேலை செய்யத் தெரியாத பயலுக்கு முறைப்பு ஒரு கேடா? என்று உறுமினார் முதலாளி.

அவன் அடிபட்ட அப்பாவி நாய் மாதிரி ஒதுங்கி விட்டான். மறுநாள் கடைக்குப் போகவில்லை. காரணம் கேட்டவர்களிடம் முதலாளி வாயிலே வந்தபடி பேசுதாரு. எனக்குப் பிடிக்கலே, நின்னுட்டேன் என்றுதான் சொன்னானே தவிர, சூடாக உறைக்கும்படி அவர் என்ன சொன்னார் என்பதைச்