பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. காகித ராஜா

Tெப்படியோ ஏகப்பட்ட பணம் சேர்த்துவிட்ட அருளானந்தர் புகழ் சேர்த்துப் பெரிய மனிதர் ஆகிவிட ஆசைப்பட்டார். -

அவர் படித்திருந்த வரலாறு அவருக்கு சாம்ராஜ்யக் கனவுகளைத் தூண்டி விட்டது. தனிக்கொடி, தனி ராஜ்யம், தனி மன்னராக நாமே நாம் என்று அவர் மனம் முனகல் குரல் எழுப்பியது.

. ‘வாளைவிட வலியது பேனா என்ற பழமொழி அவருக்குத் தெரியும். பேனாவையும் பேனா பிடிக்கிறவர் களையும் ஆட்டிவைக்கும் ஆற்றல் பெற்றது பணம் என்பதை அவர் அறிந்திருந்தார்.

தனி ராஜ்யம் காண்பதற்காக, தனக்கென ஒரு கட்சி தேவை என்று. அவர் கருதினார். கட்சி மூலம் வாய் வீச்சர் களைத் தயாரித்து அனுப்பி, மக்கள் மத்தியில் பெரும் பேச்சுகளை விதைத்து, தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வது சுலபம் என்பதை நாட்டு நடப்பு அவருக்கு உணர்த்தி வந்தது.