பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. காலமும் கடவுளு

காலப் பாழில் கவனிப்பாரற்ற வெறும் வெளிபோல் கிடந்தது அந்த இடம்.

பழமை இருள் கவிந்த அப் பெருவெளியில் பூண்டு களும், புதர்களும் கள்ளியும் களையும் மண்டிக் கிடந்தன. பொட்டுப் பூச்சிகளும் புன்மைத் தேரைகளும் மல்கிக் கிடந்தன.

அது ஒருவர் மனசை உறுத்தியது. - அவரும் மற்றவர்களைப் போல், நாம் உண்டு, நம் பிழைப்பு உண்டு என்று வாளா இருந்தாரில்லை. இந்த இடத்

தின் விதி இதுதான். இங்குள்ளோர் இதை அனுபவிக்கட்டும்’ என்று ஒதுக்கிவிட்டு, தான் ஒதுங்கி வாழத் துணிந்தாரில்லை.

இருள் சூழ்ந்த பெருநிலத்தில் தமது அறிவின் வலிமையால் சிந்தனை ஒளி பரப்பினார் அவர். இது நச்சுப் பயிர். இது நாசச் செடி. இது களை என்று சுட்டிக்காட்ட முன் வந்தார். வாழ விரும்புவோர் இவற்றை அகற்றியாக வேண்டும் என்று அறிவுறுத்தினார். .

கசப்பான உண்மைகளைக் காரமாகச் சொன்னார் அவர். அவரது அறிவொளி அநேகரை வசீகரித்தது. அவர் சிந்தனை