பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புண்ணியம் ஆம் பாவம்போம்!

கட்டுரைகளும், கருத்துரைகளும் புறப்பட்டன. பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியும் தமது எண்ணங்களை எடுத்துரைக்கத் தவறுவதில்லை அவர். -

முக்கியமான விவகாரம் ஒன்று தலையெடுத்தது. அது குறித்துத் தமது திடமான அபிப்பிராயத்தை வற்புறுத்த வேண்டியது அவசியம் என்று மகாப் பெரியவர் நினைத்தார்.

ஊரோடு ஊராகச் சேர்ந்த பொது இடத்தில் சொந்தம் கொண்டாடி முரட்டுத்தனமாகச் சண்டித்தனம் செய்தான் ஒருவன். அவனுக்குப் பாடம் கற்பிக்க ஊர் மக்கள் வெகுண் டெழுந்தனர். அவர்களைத் தட்டிக் கொடுப்பது போல் பேச ஆரம்பித்தார் பெரியவர். அவன் தொல்லை தீர வேண்டு மானால், அந்த இடத்தில் அவனுக்கு உரிமை கொடுத்துவிட வேண்டும் என்றும் யோசனை கூறினார்.

‘இப்படிச் சிறுசிறு தொல்லைகளும், பிய்ச்சுப் பிடுங்களும் ஏற்படாமல் இருக்க ஒரே வழிதான் உண்டு. முதலாளிக் காவல் நாயை தாஜா செய்து அதன் அருளைப் பெறுங்கள் என்றும் அவர் போதித்தார்.

ஆகா. மகாப் பெரியவரின் வாக்கு காலத்தின் கட்டளை. நல்ல வழிகாட்டி!’ என்று அவரைச் சேர்ந்தவர்கள் சொன்னார்கள். .

ஆனால், முரடனின் செயலாலும், அவன் போக்கிரித் தனத்தைப் பார்த்து வாலாட்டிக் கொண்டிருந்த முதலாளிக் காவல் நாயின் போக்காலும் எரிச்சல் பெற்றிருந்த மக்கள் மகாப்பெரியவரை விரட்டி அடித்தார்கள். நீர் ரிஷி என்றால் கல்லாய் மண்ணாய் சிலையாய் இரும். துரோகி என்றால் சிறைதான் உமக்கு சரியான இடம் என்றார்கள் விழிப்புற்று வீறு கொண்ட மக்கள். -

மக்கள் குரல்தான் மகாதேவன் வாக்கு என்று ஓங்காரம் செய்தது காலம்.