பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

1

O


3.

புண்ணியம் ஆம் பாவம்போம்!

அவர் ஏழை எளியவர்களுக்கும், கஷ்டப்படுகிறவர் களுக்கும் உதவி செய்தார். ஆகவே, நல்ல உள்ளம் பெற்ற பொதுநல வள்ளல் என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட சுய லாபமும் சுயவிளம்பரமும் பெற ஆசைப்பட்டார்.அன்பர்களை விழுங்கி.”

திருவாளர் சுளை விழுங்கி ரொம்பப் பெரிய ஆள். எல்லோர் கண் முன்னாலும் இருக்கிற பழங்களைக் கூட தோல் பூரணமாக இருக்கும் படி விட்டுவிட்டு, சுளையை நைசாக விழுங்கி ஏப்பம் இடும் வல்லமை பெற்றவர் இவர்.

இவர் திட்டமிட்டார்; வள்ளல் பாராட்டு விழாவுக்கு அருகதையானவர். அவர் பெயரைச் சொல்லி, விழா எடுக்கவும், ரிசு கொடுக்கவும் நிதி வசூல் செய்தால், நாட்டு மக்கள் தாராளமாகவே கொடுப்பார்கள். ஏராளமாகப் பணம் வந்து சேரும். விழாவுக்கும் பரிசுக்கும் ஒரு சிறு தொகையைச் செலவு செய்து விட்டு மீதியை நாம் பைக்குள் போட்டுக் கொள்வோம்!

அபாரமான ஐடியாடா தம்பி!” என்று அவர் மனம் அவரையே பாராட்டிக் கொண்டது.

திட்டமிட்டபடியே தடபுடல்படுத்தினார் திருவாளர் களை விழுங்கி, வள்ளல் கலையரசு அவர்களுக்கு ஒளி விழா நடத்துவோம்; தங்கக் கேடயம் பரிசு தருவோம்; பெரிய அளவுக் கேடயம் முழுதும் தங்கத்தினால் செய்யப்பட்டு, மத்தியில் வைரக் கற்கள் பதித்த அருமையான கேடயம். கலை ரசிகர்களின் மக்களின் காணிக்கையாக அவருக்கு அளிக்கப்படும் இதற்கு பல ஆயிரம் ரூபாய் தேவை; எல்லோரும் பொருளுதவி செய்யுங்கள் என்று விளம்பரம் செய்தார். தீவிரமாக முயன்றார்.