பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23

இவர் பெரிய தொல்லையாக இருக்கிறாரே! என்று கருதிய திருவாளர் சுளைவிழுங்கி இம்முறை அவரிடமே உண்மையை அறிவித்து விட்டார். அப்புறம் உங்கள் இஷ்டம்’ என்று சொன்னார்.

தங்கமுலாமும் கண்ணாடிக் கற்களும் கொண்ட கேடயத்தை தங்கக் கேடயம், வைரம் பதித்தது என்று தான் நம்பிக் கொண்டிருந்த அறியாமையை எண்ணி வேதனைப் பட்டார் வள்ளல். நாம் ஏமாற்றப்பட்டோம். பரவாயில்லை. நாட்டின் நலம் நாடுவோரை ஏமாற்றும் எண்ணம் நமக்கு இல்லை என்று நினைத்தார் அவர் தமது சொந்தப் பணத் திலிருந்து பெருந்தொகை ஒன்றை நிதிக்கு உதவி விட்டு, ‘கம்மென்று இருக்கத் திருவுளம் கொண்டார்.