பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 2

இவ்வளவு அவசரமா எங்கே போகுதுன்னு அதிசயிக்காமல் பார்க்க முடியாது!’ என்பார் பிள்ளை.

ஒருசமயம் அவரே சொல்லுவார். ‘வே, இந்த ஆறு மோசம் பண்ணினாலும் பண்ணிப்போடும். இது கொம்பேறி மூக்கன். எப்ப சீறிப் பாயும். எப்போ ஒடுங்கிப் பம்மும்னு சொல்ல முடியாது. திடீர்னு வெள்ளம் வரும். சில சமயம் தண்ணீரே இல்லாமல் வரண்டு போகும். அங்கே இங்கே ஊற்று மாதிரி தண்ணீர் கிடைக்கும். நம்ம ஊரு சொர்ணம் பண்டுவனை சாகடிச்சது இந்த ஆறுதானே? அவன் வைத்தியம் பார்க்க ஊரு ஊராப் போவான். தினம் ஆத்தைக் கடந்து வருவான். போவான். ஒரு சமயம் என்னாச்சு தெரியுமா? சொர்ணம் அக்கரைக்குப் போக ஆத்திலே இறங்கிட்டான். தண்ணி அதிகமா வர்ற மாதிரி இருந்தது. அவன் போயிர லாம்கிற தைரியத்திலே நடந்தான். இடுப்புக்கு இருந்தது தண்ணி. வேகமாக வர்றதாவும் தோணிச்சு. அவன் பாதி ஆறுதான் போயிருப்பான். ஒயின்னு பெருத்த இரைச்சல் கேட்டுது. வெள்ளம் பெரும்படை மாதிரி முன்னேறி வருது. சொர்ணத்துக்கு என்ன பண்றதுன்னே புரியலே. அவனுக்கு நீச்சலும் தெரியாது. தெரிஞ்சிருந்தாலும் பயன்பட்டிருக்காது. வெள்ளம் வேகமாக வந்து அவனை உருட்டித் தள்ளி புரட்டி இழுத்துக் கிட்டு போயிட்டுது. இவ்வளவையும் நான் கரை மேட்டிலே அந்தப் பனைமரத்துக்குப் பக்கத்திலே நின்னு பார்த்துக்கிட்டேதான் இருந்தேன். நான் என்ன பண்ன முடியும்? சும்மாவா சொல்றாங்க - மனிசன் நீரு கிட்டேயும் நெருப்புகிட்டேயும் எதிர்த்து நின்னு எதுவும் பன்ன முடியாதுன்னு?

இப்படி அனுபவக் கதைகள் பல உண்டு அழகிய சொக்கரிடம். - -

அழகு சொக்குவுக்கு அந்த ஆற்றை ஒட்டிப் பல கனவுகள், பல ஆசைகள். அவற்றில் ஒன்று, ஆறு மலையில்