பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 247

‘இதுதான் வாழ்க்கை. இன்பமான பிள்ளைப் பருவம் கனவாய் கழிந்தது. மிடுக்கான இளமை உரிந்து விழுந்த சட்டைகளோடு சருகாய் மறைந்தது. என் மேனியின் மிளிர்வும் எழிலும் எங்கோ போயின, காலத்தோடு ஓடி மறையும் அழகியின் மேனி வனப்பு போல. இனி என்ன, மரணம் தான்.”

- பிறப்பு இறப்பு... பிறந்தால் இறக்க வேண்டுமாம். என்ன நியதியோ? சே வாழ்க்கை எவ்வளவு குறுகியது! - இப்படியும் அதன் உள்ளம் ஒலிசெய்தது. .

மரணம் என்ற எண்ணமே அதை உலுக்கி எடுத்தது மேகத்தை உருட்டி வதைக்கும் இடி மின்னல் போல.

சாவின் மென் ஸ்பரிசம் அதன் உடலிலே, உயிரிலே, கிசுகிசு மூட்டி விட்டதா? பின் அந்தச் சர்ப்பம் ஏன் அப்படி புரளுகிறது? பிரசவிக்கும் தாயின் வேதனை அதையும் பற்றிக் கொண்டதோ? அது ஏன் முகத்தில், சடலத்தில், வேதனை நெளிவுகளுடன் சுழல வேண்டும்?

பாம்பு சுருண்டது. புரண்டது. நீண்டது. நெளிந்தது,

குறுகிற்று. அதன் மேல் படிந்திருந்த ஒரு போர்வை கழன்றது.

மீண்டும் வேதனை. துடிப்பு. சட்டை நீக்கம். கிருஷ்ண சர்ப்பம் குறுகிக் குறுகி வந்தது, சட்டை கழறக் கழற.

என்ன வியப்பு முக்கி முனகிய கிழக் கருநாகம் தானா அது? குழந்தையின் குறுகுறுப்பு அதன் கண்களில் ஒளிர்கிறதே! அழகியின் மென்மை எழில் அதன் மேனியில் பளபளக்கிறது. இளமையின் வீர்யம் அதன் அசைவில் தலைகாட்டும்.

இன்ப மூச்சு பயின்ற நாகம், அப்பா துன்பத்தின் பின் இன்பமா? அவ்விதமானால் இன்பத்தை முழு மதிப்புடன் உணர, துன்பமும் தேவைதான். நான் செத்தேனா, பிறந்தேனா?