பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஆம் பாவம்போம்!

3

{}

அணிகிறேன். அது கழுத்தை நெரிக்கிறது. உடம்போடு ஒட்டி, அனலாய் தகிக்கிறது. விஷம் மாதிரிக் கொல்லுகிறது. நான் வேதனை தாளாமல் கத்துகிறேன். அவள் உல்லாசமாகக் கைகொட்டிச் சிரிக்கிறாள். நான் சட்டையைக் கிழித்தெறிய முயல்கிறேன். தீப்பட்டதுபோல் கைகள் காந்துகின்றன. நான் அலறிக்கொண்டு விழிக்கிறேன்....

இந்தவிதமான பயப்படுத்தும் கனவுகள்கூட, அனுப விக்கும் வேளையில், தனியானதாரு கவர்ச்சித் தன்மையோடு விளங்குகின்றன என்பதையும் நான் கூறத்தான் வேண்டும்.

பய உணர்வைத் துண்டிவிடாத அதீதமான கனவு களையும் நான் அனுபவிக்கத்தான் செய்கிறேன்.

நள்ளிரவு. ஊர் சவ உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. நல்ல நிலவு. பட்டப்பகல்போல் நிலா காய்கிறது. ஒளியும், கட்டிடங்களின் நிழலும் அற்றுக் கோலங்களாய் பிணைந்து கிடக்கிற ஒரு தெரு. திடீரென்று கோரமான கூச்சல்கள் காதில் விழுகின்றன. மேலே இருந்து வருவதுபோல் தெரிகிறது. இரைச்சல்கள் நெருங்கி வருகின்றன். யாரோ யாருடனோ சண்டைபிடிப்பதுபோல. நான் மேலே பார்க்கிறேன். வான வெளியில் பறந்து முன்னேறுகின்றன விசித்திரப் பிராணிகள். தீநிறக் குதிரை ஒன்று. பளபளக்கும் சிறகுகள் பெற்றது. அதன் முகம் சீட்டுக்கட்டில் உள்ள ராஜா தலை மாதிரி. மூக்கு, முழி, தொங்கிப் புரளும் தலைமுடி எல்லாம். அது மவுனமாக வருகிறது. அதன் பக்கத்தில், அதோடு கத்திச் சண்டை போட்டபடி வரும் ஒரு மிருகம். குதிரை அல்ல. உடம்பு வெண்மை நிறம். பால் வெள்ளை இல்லை. லேசாகக் காப்பி கலக்கப்பட்ட பாலின் வர்ணம் என்று சொல்லலாம். கிளாவர் ராணியின் மூஞ்சி. சிடுசிடுவென்று. சண்டைக் குணத்தைப் பிரதிபலிக்கிறது. அது வெறித்தனமாகக் கத்திக்கொண்டு, ராஜாக் குதிரையை கடிக்க முயல்கிறது. குதிரை கனைத்துக்