பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புண்ணியம் ஆம் பாவம்போம்!

போகிறாள். அவன் மணலில் படுத்துவிடுதிறான். அவள் சிரித்துக்கொண்டு, அவன்மார்பு மேல்சாய்ந்து கிச்சு கிச்சு மூட்டுகிறாள்.

சற்று தள்ளி இன்னொரு ஜோடி. சுமாரான தோற்றம் பெற்ற சுமார் நபர்கள். அவளும் அவனும் அவர்களுக்கு மிகச் சுவாரஸ்யமான உணர்ச்சி விளையாட்டில் ஈடுபட்டிருக் கிறார்கள். அவன் உடலில் அவள் கை வேலைசெய்து கொண்டிருக்கிறது.

அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் கூடக் காட்டமுடியாத காணப்படாத - அனங்க ரங்க விளையாட்டு!

சுற்றுப் புறத்தில் இருப்பவர்கள், மணலில் நடந்து போகிறவர்கள். பார்வை அவர்களைத் தொடாமல் இல்லை. அவர்களிடமிருந்து ஒருவிதமான சிரிப்பு உதிராமல் இல்லை. என்றாலும், அவ்விருவரும் அவர்கள் விளையாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழ்ந்திருப்பதை எதுவும் தடை செய்வ தாயில்லை. - -- w

“எது ஆபாசம்? எங்கே ஆபாசம் இருக்கிறது? எப்படி எப்படி ஆபாசம் காணப்படுகிறது?’ என்று ஆராய்ந்து அலசிப் பார்த்து மூடி மறைக்கும்படி உத்திரவு போடத் தவிக்கும் ‘ஆபாசம் தேடிகள் அந்தப் பக்கம் வந்து கண்ணோட்டம் விடுவதுமில்லை!

பெண்கள் முன்னேற்றம்

மாலை 5.30 மணி

பல அலுவலகங்களிலிருந்தும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வெளி வருகிறார்கள். பலராய், சிலராய் தனித்தனியாய் நடந்து போகிறார்கள். அநேகர் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறார்கள். -