பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57

ஆடுவாள். இதை விளம்பரப்படுத்தும் போட்டோக்கள் வெளியே காட்சி தருவது உண்டு. அவற்றில் உள்ள நாட்டிய பாவங்களும், ஆடை அலங்கோலங்களும் சீமான்களின் ஆசையையும் உணர்ச்சிக் கிளுகிளுப்பையும் தூண்டு வனவாகவே இருக்கும்.

இங்கு பெரும்பணக்காரர்களும் புதுப் பணக்காரர்களும், சமூகத்தின் மேல் தட்டில் உள்ளவர்களும், அவர்களைக் காப்பி அடிப்பவர்களும், அந்தஸ்திலும் நாகரிகத்திலும் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள ஆசைப் படுகிற வர்களும், இன்னவரன்ன பிறரும் வருவது வழக்கம். பணத்தை அலட்சியமாகக் காலி பண்ணுவது அவர்களது பொழுதுபோக்கு.

அந்த ஒட்டலினுள்ளிருந்து இரண்டு வாலிபர்கள் வெளியே வருகிறார்கள், பெரிய மனுஷத்தனப் பம்மாத்துப் பேர்வழிகள்.

‘இப்ப பரவால்லே, இந்த ஸிட்டியிலே நைட்

லைஃபிலும் ஜீவ களை ஏற்பட்டு வருது ஒருவன் திருப் தியோடு சொன்னான்.

‘என்னா பிரதர் பிரயோஜனம்! பெண்கள் இன்னும் துணிந்து வரலியே. எங்கே போனாலும் நீரும் நானும், நம்மைப் போன்ற பிரதர்களும் தானே நிறைய நிறையக் கூடுகிறோம். ஜாலியா ஜோடி சேர, டான்ஸ் பண்ண, ஸ்வீட் நத்திங்ஸ் பேசி இனிமையாப் பொழுது போக்க, சொசைட்டி கர்ள்ஸ் எங்கே வாறாங்க? இந்த ஸிட்டி இன்னும் எவ்வளவோ முன்னேறனும், பிரதர் மற்றவரின் குறைபாடு

இது.

‘பத்து வருஷங்களுக்கு முன்னாலே இதே ஸிட்டி இருண்டு போயி, அழுது வடிஞ்சுது, இல்லையா? இப்ப சமீப