பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புண்ணியம் ஆம் பாவம்போம்!

அவன் பெருமூச் செறிந்தான். ரோட்டில் ஒரு கட்டை வண்டி போனது. அதை ஒட்டிச் சென்றவன் கரு மெழுகினால் செய்து உருட்டித் திரட்டப் பெற்த உருவமென மினுமினுத்தான். முரட்டு ஆள். பெரிய மீசை. r

. இவன் எமனுக்குத் தம்பிபோலும். இவன் அப்பன் செத்துப்போனான். அவன் இவன் மாதிரி இருந்ததில்லை. இவனுடைய தாத்தா உயரமாக, பருமனாக இருந்தார். அவருக்கு அப்பனை எனக்குத் தெரியாது. அவனும் இவனைப்போல் கட்டை வண்டி ஒட்டிச் சென்றிருந் திருப்பான். அல்லது, அப்படி ஒட்ட ஒரு ஆளை நியமித் திருக்கக்கூடிய பண வசதி பெற்றவனாக இருந்தாலும் இருந்திருக்கலாம். அப்படி இருக்க முடியாது என யார் சொல்லக்கூடும்? அவனுக்குத் தாத்தா.

அவனுடைய மனம் காலம், வெளி அனைத்தையும் கடந்து, எங்கெங்கோ பறந்து திரியக் கூடிய ஆற்றலும் அருவச் சிறகுகளும் பெற்றிருந்தது. *

இப்போது அது தன் வேலையைக் காட்டியது. பகம்பரப்பிலே ஜிவ் ஜிவ் எனத் தாவிப் பாயும் தத்துக் கிளி மாதிரித் திரிந்தது. இளம் வெயிலில், வெறும் வெளியில், மிதந்து கிண்ணென மேலேறி, மீண்டும் நீந்தி, திரும்பவும் உய்யென்று மேலே மேலே பாய்ந்து நீலவானை நோக்கி உல்லாசமாகப் பறக்கும் சின்னஞ்சிறு குருவி போல் அது விளையாடிக் களித்தது... x

- இவனுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா... இப்படிப்பட்ட முன்னோர்கள் எப்படி எப்படி வாழ்ந்திருப் பார்கள் என்று தரிசித்தது. அந்தக் கிளையில் ஒருவன் பாண்டிய மன்னர் காலத்தில் இருந்திருப்பான். பாண்டிய