பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 85

‘ஐயா, உம்மைத்தான். இங்கே வந்து...’

“எனக்கு சோலி இருக்கு’ என்று வெடுப்பாகச் சொல்லி விட்டுப் போனான் அவன். தொடர்ந்து, “கூலி அவுத்துக் கொடுத்திடுற மாதிரித் தான் வேலை செய்யனுமாம் வேலை!” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

இதுபோல் பல அனுபவங்கள் நேர்ந்தன.

ஊரில் மரங்கள் அதிகம் காணப்படவில்லை. நின்ற மரங்களிலும், ஆட்டுக்குக் குழை பறிப்பது. விறகுக்கு குச்சி முறிப்பது என்று சிலர் அவ்வப்போது தங்கள் கைவரிசை களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். 3. -

தெருவில் நின்ற வேப்பமரம் ஒன்றின்மீது ஏறி, கிளை களை முறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் ஒரு பையன்.

‘ஏய், ஏன் மரத்தை நாசப்படுத்தறே? என்று அதட்டினார் பிள்ளை.

அவன் பயமோ, மரியாதை உணர்வோ காட்டவில்லை. ‘உமக்கென்ன? நீரு வச்சு வளர்த்த மரமா இது?’ என்று எடக்காகச் சொல்லெறிந்துவிட்டு, தனது வேலையைத் தொடர்ந்து செய்தான். -

ஊரை அழகாகப் பேணுவது, ஊர் சொத்தைப் பாதுகாப்பது என்கிற உணர்வுகளைவிட, அழிவு வேலை பண்ணுவதிலும் அசிங்கப்படுத்துவதிலுமே மக்களுக்கு ஆர்வம் இருப்பதை பிள்ளை புரிந்து கொண்டார்.

எந்த கிராமமும் சுத்தமாக இல்லை. ஊருக்குள் பிரவேசிக்கிற வழியிலும், ஊரை விட்டு வெளியே செல்கிற எல்லையிலும், பாதையின் இருபுறங்களிலும் மலக்காடுதான். தெருக்களின் ஓரங்களும் ஜனங்கள் மலம் கழிக்கிற