பக்கம்:புதிய பார்வை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 03

அடிவானத்துப் படுகையில் குங்கும வெள்ளம்; கதிரவன் உதிக்க இருக்கிருன். பூக்களின் மணங்களே வாரிக் கொள்ளே யடித்துக் கொண்டு ஓடுவதுபோல விடிகாலப் பனிக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பேதா பேதம் நிறைந்த பல வகைப் பறவைகளின் குரல் ஒலி, செவிகளில் அமுத மழை யெனக் கேட்கும் முனிவர்களின் வேத முழக்கம், நதிகள் பாயும் கலகல சப்தம் என்ன அருமையான குழ்கிலே!

本 率 零

இதோ, இதுதான் நைமிசாரணிய வனம், ஆகா! என்ன அழகு! எவ்வளவு வளம்! எத்தனை பசுமை உயர்ந்த மரங்கள்: அடர்ந்த செடி கொடிகள்; குளிர்ந்த ஆறுகள்: கனிங்த சூழ்நிலை! இது வெறும் காடுதான? அல்லது இன்பமும், அமைதியும், புனிதமும் புண்ணியமும், அறமும், அருளும், ஒருங்கே செழித்தோங்குவதற்கென்று ஏதாவ தொரு தெய்வம் தன்னுடைய பிரத்யேகக் கவனத்தின் கீழ் இங்த இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறதா? என்று எண்ணத் தோன்றும்படியாக அமைந்திருந்தது காட்டின் அழகு. -

காய்ந்த தருப்பைப் புற்களில் வேயப்பட்ட இந்தக் குடிசைகள்:-இவை யாருடையவை இந்த ஆடம்பரமற்ற குடிசைகளின் தோற்றத்திலிருந்து ஏதோ ஒரு பொருள் நம்மைக் கவருகின்றதே! அது என்ன? ஆத்மாவை இறுகத் தழுவும் ஏதோ ஒர் பேரொளி இந்த வனம் முழுவதும் வியாபித்திருக்கின்றது போலும் வாழ்க அந்த ஒளி. அந்த ஒளிக்கு வணக்கம் செலுத்திவிட்டு உள்நுழைவோம். முனிவர்களின் ஆசிரமங்களாகிய அந்தக் குடிசைகளிலே தீபங்களின் ஒளி, தூபங்களின் நறுமணம், முனிவர்களும், அவர்களுடைய தர்ம பத்தினிகளும் வைகறைக் கடன்களை முடிக்கிருர்கள், எங்கும் அமைதி, எங்கும் இன்பம், எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/105&oldid=598158" இலிருந்து மீள்விக்கப்பட்டது