பக்கம்:புதிய பார்வை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i is

பொருளுணர்ந்து இரசிப்பதுதான். பொருளுணர்ச்சி இல்லை எனில் இசையை மனிதன் இரசிப்பதற்கும், மிருகங்கள் இசையை இரசிப்பதற்கும் வித்தியாசமே இருக்காது. மனிதன் மனிதனைப்போல் இசையை இரசிக்க வேண்டும். மிருகத்தைப்போல் இசையை இரசிக்கக் கூடாது. மனி தனின் வசதிகளே வைத்துக்கொண்டு மிருகங்களின் அசெள கரியங்களோடு இசையை இரசித்து அல்லல்படுவது எதற் காக ஆகவே நமது இசை மேடைகளில் இருகிலத்து உடன்பாடும் உள்ள இரசனே வேண்டும். ஏனெனில் சுவை இருவகை கிலத்தும் பிறப்பது. - -

முடிவாக நமது சொற்பொழிவு மேடை, நமது இலக் கிய மேடை, நமது நாடக மேடை, திரைப்பட மேடை ஆகிய அனைத்து மேடைகளிலும் ஒருவழிப் போக்குவரவான கைக்கிளைச் சுவை நிகழாமல் இருவகை கி லத் து ம் இயைந்த இரசிகத் தன்மை வரவேண்டும். அப்படி ஒரு பக்குவமான இரசிகத் தன்மை ஏற்படாதவரை நமது கலை கள் வெற்றியடைவதில் பின் தங்கி கிற்கவே நேரிடும் என் பதை வருத்தத்தோடுதான் சொல்லிக்கொள்ள வேண்டி அயிருக்கிறது. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/121&oldid=598190" இலிருந்து மீள்விக்கப்பட்டது