பக்கம்:புதிய பார்வை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 7 |

இருக்கிறது. வசதியாக இருப்பவர்களுக்கும் அவர்கள் கிலேக்கு ஏற்ப இங்த ஏக்கம் உண்டுதான்.

வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட வாழ ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிற வாழ்க்கையில் கவர்ச்சியும் மோகமும் அதிகம். ஏனென்ருல் அது அருகில் வருவது போல் தோன்றியபடியே விலகி விலகிப் போய்க் கொண் டிருப்பது. .

தொழில் முறையிலும் கூட :

வக்கீலாயிருந்து தொழில் நடத்திக் கொண்டிருப்பவர், பக்கத்து வீட்டில் டாக்டராக இருப்பவரைப் பார்த்து அவ ருடைய வருமானம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குவதும், டாக்டர் தம்மைக் காட்டிலும் செழிப்பான வருவாய் உள்ள வியாபாரி ஒருவரைப் பார்த்துத் தம் முடைய வருமானம் குறைவு என்று ஏங்குவதும், வியாபாரி அரசியலில் புகழும் பதவியும் செல்வாக்குமாக வாழும் மந்திரியைப் பார்த்து ஏங்குவதுமாக வாழ்க்கையும், அதில் உள்ள மனோபாவங்களும் ஏதோ ஒரு விதத்தில் கிறைவு அடையாதவைகளாக இருந்தபடியே கிறைந்தது போல் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உள்ளே காற்று கிற்கும் இடைவெளிக் குழலாகி வெளியே மட்டும் பருத்துத் தோன் றும் மூங்கிலைப்போல் மனிதனுடைய மனத்தில் இடை வெளியாயிருக்கிற பகுதிகளேயெல்லாம் ஏக்கங்கள் கிறைத் துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது சில ஏக்கங்கள் ர்ேக் தால் எப்பொழுது எதற்காகத் தோன்றியவை என்றே தெரியாமல் வேறு சில ஏக்கங்கள் அந்த இடங்களில் வந்து சிரம்பிக் கொள்கின்றன. - -

"சுகத்துக்குக்கூட ஆசைப்படாமல் இருப்பதுதான் பெரிய சுகம் என்று ஒரு தத்துவ்ம் உண்டு. தத்துவங்களைத் தேடிச் சராசரி மனிதன் திருப்தி அடைய முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/123&oldid=598194" இலிருந்து மீள்விக்கப்பட்டது