பக்கம்:புதிய பார்வை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி {29;

தான் இங்தக் கடுமையான சூழ்கிலேயிலிருந்து நாம் புரிந்து, கொள்ள இயலும். -

மென்மையும் பண்புமுள்ள பேச்சுக்கள் எந்த காவின் லிருந்து ஒலிக்கின்றனவோ, அங்த காவிலிருந்து பிறருடைய. செவிகளுக்கு நம்பிக்கையும், மலர்ச்சியும் கிடைக்கின்றன. அங்த காவிலிருந்து பிறக்கும் சொற்கள் விலைமதிப். பற்றவை. •,

பிறரிடம் சொற்களே விட்டெறிவதுபோல் பேசுவது: கூட ஒரு வகைக் கொலைத் தொழில் என்றுதான் சொல்ல. வேண்டும். பிறருடன் எளிமையாகவும், அழகாகவும், அள வாகவும் பழகுவதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லலாம். பழைய நாட்களில் பெண்களுக்கு வளையல் விற்பவர்கள் தெருத் தெருவாக விதம்விதமான வளையல்களோடு வரு வார்கள். வாங்குகிறவர்களுக்கு அவர்களே வளையல்கள் அணிவிப்பதுதான் பழைய காலத்து வழக்கம். வளைகளும் உடைந்து விடாமல் அணியப்படுகிற கைகளும் கொந்து. விடாமல் அவர்கள் வகள அணிவிக்கும் திறமையைப் பிறரு. டன் பழகும் பக்குவமான கிலேக்கு உதாரணமாகக்கொள்ள முடியும்.

போலி மதிப்பு

பிறர் கம்முன் நியாயமாகச் சிரிப்பதற்கும் அஞ்சுகிற: படி நாம் வளர்த்துக் கொள்ளுகிற கெளரவங்கள் என்றும் நம்மிடம் கிலக்கும் என நம்ப முடியாது. பிறர் வாயைப் பேசவேண்டிய இடங்களில் கூடப் பேச விடாமல் கட்டுப் படுத்தி நிறுத்தவும், சுபாவமாகப் பழக வேண்டிய இடங். களில்கூட நடுநடுங்கி நிற்கச் செய்யவும் முடிகிற கெத்து வேண்டும் என்று அதிகாரிகள் உத்தியோக லட்சணம்’ கூறுவார்கள். பயமுறுத்தி அடைகிற கெளரவம் என்ரு. வது ஒரு நாள் கரைந்து போகும். காட்சிக்கு எளிமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/131&oldid=598210" இலிருந்து மீள்விக்கப்பட்டது