பக்கம்:புதிய பார்வை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . புதிய பார்வை

நியாய உணர்ச்சியும், தன்னம்பிக்கையும், உள்ள ஒருவன் ஒப்புக்காக எதையுமே செய்யக்கூடாது. பல காரியங்களே அந்தக் காரியங்களின் அவசிய அநாவசியங், களேப் பற்றிச் சிந்தித்து முடிவு எடுக்காமல் ஒப்புக்காகவே செய்து பழகுகிறவன் நாளடைவில் கோழையாகி விடுவான். ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றே அதைச் செய்து முடிக்கும் தன்மானம் அவனிடமிருந்து படிப்படியாகப் போய்விடும். அப்படி நிலைக்கு ஆளான பின்பு செய்தே முடிக்கவேண்டும் என்ற வகையைச் சேர்ந்த காரியத்தைக் கூட ஒப்புக்காகச் செய்வது போலத்தான் அவனுல் செய்ய முடியும்.

இராமாயண மேடை நாடகத்தில் இருபது ஆண்டு களாக அநுமார் வேடம் போட்டுப் போட்டு அந்த வேடத் துக்கு ஏற்றபடியாக வாயைக் கோணிக்கொண்டு கிற்கப் பழகிய ஒருவன் மேடையிலிருந்து இறங்கி நிஜ உலகில் முகத்தைக் காட்டுகிறபோதும்கூட அதேகோணல் சிறிதளவு தெரியத் தொடங்கி விடும். எதையும் ஒப்புக்காகச் செய் யப் பழகிக்கொண்டு விடுவதே ஒரு திராத நோய். கூடிய வரை காரண காரியத்தோடு ஒழுங்காகச் செயல்பட வேண் டும். அப்படிச் செயல்படாமல் நாகரிகச் சடங்குக்கு ஏற்ப ஏளுேதானே என்று செயல்படுவதற்குப் பழகிக்கொண்டு விட்டால் அதுதான் மூட நம்பிக்கை என்று சொல்லலாம்.

செயல் துணிவு . -

ஒரு செயலைத் துணிவாகச் செய்வதற்கு வேண்டிய கம்பிக்கைதான் பக்தி என்று சொன்னல் அதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். செ ய லி ல் கம்பிக்கை இல்லாமல் ஏைேதானே வென்று செயல்படுகிறவனேக்கூட காஸ்திகன் என்று சொல்லலாம்தானே : காகரிக உலகத்தில் ஏனே தானே என்று இருப்பதும்கூட ஒரு கெளரவமான சடங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/138&oldid=598224" இலிருந்து மீள்விக்கப்பட்டது