பக்கம்:புதிய பார்வை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி |43;

ஒருவகைக் கலந்து வாழும் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு. மனிதனுக்கும் சுற்றுப்புற உணர்ச்சி அவசியம் வேண்டும். தனிமனிதனுடைய சுகதுக்கங்களுக்கும் அவ ற் றி ன் காரணங்களுக்கும் அவனே பொறுப்பாளி. ஆனலும் அந்தச் சுகதுக்கங்கள் சமூகத்தோடு தொடர்புள்ளவைகளாகவே இருக்கின்றன. பல பேருக்குத் தெரியும்படியான ஒருவ: னுடைய செல்வமும், சுகமும், சமூகத்தின் கவனத்துக்கும், கணிப்புக்கும் ஒவ்வொரு விநாடியும் இலக்காகிக்கொண் டிருக்கின்றன. அதேபோல் பல பேருக்குத் தெரியும்படி யாக ஒருவனுடைய துக்கமும், வேதனைகளும், பழியும். பழக்க வழக்கங்களும்கூடச் சமூகத்தின் கவனத்துக்கும். கணிப்புக்கும் ஒவ்வொரு விநாடியும் இலக்காகிக்கொண் டிருக்கின்றன.

இதை கினேவு வைத்துக்கொண்டு வாழ்வதுதான் சுற். றுப்புற உணர்ச்சி. .எட்டு மாடிக் கட்டடம் உள்ள பெரிய ஒட்டலில் எர்க் கண்டிஷன் செய்யப் பெற்ற ஹாலில் அமர்ந்து வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு நீங்கள் படியிறங்கித் தெருவில் பிரவேசிக்கும்போது எதிர்ப் பக். கத்து மரத்தடியிலே குழிந்த வயிறும் பஞ்சடைந்த கண்களு. மாகப் பசியின் பிரதிநிதிகளாய் வீற்றிருக்கும் பத் துப் பிச்சைச் காரர்களைப் பார்த்தால் உங்கள் உடம்பும் மனமும் கூனிக்குறுகிக் கூசுவது உண்டா, இல்லையா ?” நீங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு வந்ததை எண்ணி" உங்களுக்கே அருவருப்பு உண்டாகுமா இல்லையா ? இப் படிப் பிறருடைய துக்கங்களே உணரும்போது தன்சுகத்ை த. எண்ணிக் கூசுவதும் சுற்றுப்புற உணர்ச்சிதான். உயர்ந்த, பண்பாடுகளுடன் வாழ்கிற சிறந்த சமுதாயத்துக்கு இந்தச்ா கூச்சமும் ஒர் அடையாளமாகும். வெறுக்கத்தக்க சுகம் . . . -

நூறு பேரை அழச்செய்து வேதனைப்படுத்தி அதல்ை. பத்துப்பேர் சிரி த் து வாழ்கிற வாழ்வு சமுதாயத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/145&oldid=598238" இலிருந்து மீள்விக்கப்பட்டது