பக்கம்:புதிய பார்வை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதிய பார்வை

இந்த வளர்ச்சிக்குச் சில இடையூறுகளும் உண்டு. உரு, உள்ளடக்கம், உத்தி, கடை, எல்லாவற்ருலும் தமிழ் நாவல் தரப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படும் இதே வேளையில், உரு, உள்ளடக்கம், உத்தி பற்றி எல்லாம் தெரி யாமல், அல்லது கவலைப்படாமல் கதாபாத்திரம் பேசும் வார்த்தையிலும், கடையிலும் வெறும் தமிழ் நடையை மட் டுமே தேடுகிறவர்களும் நம்மிடையே இருக்கிரு.ர்கள். பேச்சு வழக்கு என்பது வானவில்லைப் போல் நிறங்களின் அழ. குடையது. வானவில் பிளாக் அண்ட் ஒயிட்டாக மட்டுமே. தோன்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியுமா? தமிழுக்கு ஒரு சமூகக் கட்டுபாடு (Social Control) வேண்டும்.

மக்கள் சேருமிடத்தில் பேசப்படுகிற சொல்லைச் 'சேரி மொழி" என்று செய்யுளுக்கே ஏற்கிருர் தொல்காப்பியர். கமது தற்காலத்தவர்கள் உரைநடைக்கே ஒரு ஏகபோகம். அல்லது ‘மனேபொலி உண்டாக்கப் பார்க்கிருர்கள். இந்தியாவிலுள்ள வேறெந்த மொழி மறுமலர்ச்சியாளர் களுக்கும் அவர்களுடைய தாய் மொழியிலுள்ளவர்களிட மிருந்து இப்படி ஒரு மிரட்டல் இல்லை. தமிழில் மட்டுமே. மொழிக்குப் பிரபுத்துவம் கொண்டாடும் பழமையாளர்கள் இருக்கிருர்கள் என்பதை வருத்தத்தோடு கூற வேண்டி யிருக்கிறது.

இப்படிப்பட்டவர்களின் பிரச்சார த்தால் பேச்சு கடை யில் அற்புதங்கள்புரிந்துள்ள புதுமைப்பித்தன், தி. ஜானகி ராமன், ஆர். சண்முகசுந்தரம் முதலியவர்களுக்குக் குறை. 5ற்பிக்கப்படுகிறது. காலமாறுதலைச் சித்திரிக்கும்போது காலத்தை மாற்ருத நடை பயன்படுவதில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ சமயம் பரவ ஆரம்பித்த காலத். தில் அச்சுழலில் சிக்கிய ஒர் இந்து உயர்வகுப்புக் குடும்பத் - தின் கிலேமையைப் புதுமைப்பித்தன் "புதிய கூண்டு' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/22&oldid=597987" இலிருந்து மீள்விக்கப்பட்டது