பக்கம்:புதிய பார்வை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25

தமிழகத்தில் காவல் எழுதுகிற ஆசிரியரின் கடமையில் தேசபக்திக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. இத்துறையில் கல்கி செய்த விதமான தொண்டு இன்னும் தொடரப்படவில்லே என்றே நான் கருதுகிறேன். ஸெக்ஸ் சம்பந்தமான அரைகுறைக் கதைகளே எழுதுகிற அளவுகூட முக்கியமான தேசியப் பணிகளில் நமது காவ லாசிரியர்களின் கவனம் செல்லவில்லையே என்று எண்ணும் போது வருத்தமாயிருக்கிறது.

நூற்றில் ஒன்ருக இருக்கிற அசிங்கத்தை எழுதுவது மட்டுமே யதார்த்தமாகும் என்கிற சிலர் நூற்றில் ஒன்ருக இருக்கிற கல்லதை, இலட்சியவாதத்தை எழுதும்போது மட்டும் அதை யதார்த்தமாக ஒப்புவதில்லை. இருபது வருஷங்கள், கல்லுக்குள் ஈரம், போன்ற காவல்களை எடுத் துப் படிக்கும்போது உணரும் நாடளாவிய பெருமிதத்தை மற்றவற்றைப் படிக்கும்போது உணர முடிவதில்லை. பண் பாட்டிலும், தேசிய இலட்சியங்களிலும், பரங்த அநுபவ அறிவிலும் வல்லவரான கு. அழகிரிசாமி போன்றவர்கள் காவல் எழுதும் துறையில் ஈடுபட்டால் தமிழுக்கு கிறைய லாபம் இருக்கும். பத்திரிகைச் சுழலில் சிக்காமல் முதல் ஐந்து நாவல்களுக்குமேல் புத்தகமாகவே வெளியிட்டு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் புரிந்த நாவல் எழுத்தாளர் களில் மகரிஷி கன்ரித்துப் பெருமையோடு கிற்கிருர், . .

"இதயநாதம்' நாவலில் நமது சங்கீதக் கலையின் நோக்கு எங்த உயர் எல்லேயைத் தழுவுகிறது என்ற தத்து வம் மிக அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. 'டென்னளி வில்லியம்ஸ்' எழுதுவதுபோல் மன விவகாரப் பைத்தியங் களே, காமம், மனநோய் போன்றவற்ருல் பிடிக்கப்பட்ட நூராடிக் பாத்திரங்களே வைத்து நாவல்கள் எழுதுவதாகச் சிலர் புறப்பட்டிருக்கிருர்கள். இவை கலே மெருகற்ற அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/27&oldid=597997" இலிருந்து மீள்விக்கப்பட்டது