பக்கம்:புதிய பார்வை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையில் கிருதயுகம்

ஒரு பெரிய யுகத்தின் மிக நீண்ட வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒர் ஆண்டில் கவிதை படைத்து மறைகிற கவிகளைவிடத் தன்னுடைய விசுவரூப மான கவிதைத் தன்மையைக் கொண்டே ஒரு புதிய யுகத்தைப் படைத்துத் தருகிற கவி இணேயற்றவன். அத் தகைய மகாகவி ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்பதைவிட ஒரு காலத்தையே தன் சொற்களால் வாழ வைத்தான் என்பதுதான் பொருத்தமான புகழ்ச்சியாக இருக்கமுடியும். தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு அப் படி ஒரு கவி கிடைத்திருக்கிருன். அந்தக் கவியை அவ னுக்கே பொருத்தமானதும் பிடித்தமானதும் ஆகிய ஒரு தொடரால் கொண்டாடிப் புகழவேண்டும் என்ற ஆசை யில்ை இங்தத் தலைப்பையே தேர்ந்தெடுத்தேன். தமிழில் மகாகவி பாரதியின் சாதனைகளைப் பாரதி யுகம், பாரதி சகாப்தம் என்றெல்லாம் புகழ்வதைவிடக் கவிதைத் துறை யில் ஒரு "கிருதயுகம்' பிறந்துவிட்டது என்றே கொண் டாடலாம். -

தருமமே மேலோங்கி நடக்கும் யுகம் என்றும் சத்திய யுகம் என்றும் ஒரு சிறிதும் இழுக்கின்றிச் செய்யப்பட்ட யுகம் என்றும், கொள்ளல், விற்றல் இன்றி வாழ்வை யாவரும் சமமாகக் கலந்தநுபவிக்கும் யுகம் என்றும், மனித ருக்கு ஒருவகைக் கவலையும்;துன்பமுமில்லாத யுகம் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/30&oldid=598003" இலிருந்து மீள்விக்கப்பட்டது