பக்கம்:புதிய பார்வை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதிய பார்வை

கவிதைத் துறையிலே அடிமைத் தளைகள் விடுபட்டிருக்கின் மன. கவிதைத் துறையிலும் குடியரசு வாய்த்திருக்கிறது. கவிதைத் துறையிலும் இடிபட்ட சுவர்போலக் கலி வீழ்ங். திருக்கிறது. "ஆகா'வென்று எழுந்த யுகப்புரட்சி போலக் கிருதயுகம் மலர்ந்திருக்கிறது. இந்தக் கவிதைக் கிருதயுகத் தையே 'பாரதியுகம்' என்றும் பெயரிட்டு அழைக்கலாம். தமிழ்க் கவிதைக்குப் பாரதி தோன்று முன்பே மிக நீண்ட தும், மிக வரையறைகள் உள்ளதுமான ஒருபெரிய பாரம்பரி யம் உண்டு. அந்த மாபெரும் பாரம்பரியத்துக்குப்பின் ஒரு புதிய யுகத்தை மலரச் செய்ய வைத்த கவிஞன் மிக வல்லவ கை இருங்தாலொழிய அத்தகைய சாதனைகள் கிகழ்க் திருக்க முடியாது. சுவை புதிது, சொல் புதிது, பொருள்

புதிதாக வந்த சோதி மிக்க நவகவிதையைப் படைத்தவன்

பாரதி. தேவ சக்திகளை நம்முள் கிறைக்கும் புதிய தமிழை உருவாக்கித் தந்தவன் பாரதி. அவன் கவிதையை எல்

லார்க்கும் புரிகிற பாமரனின் சொல்லில் புகழவேண்டு. மால்ை அது எல்லாத் தமிழர்க்கும் எல்லா இந்தியர்க்கும்

சொந்தமான சமதர்ம சுதேசிக் கவிதை. தெய்வீகத்தை யும் தேசியத்தையும் இணைத்த கவிதை அது. மரபையும் புதுமையையும் இணத்த கவிதை அது. பழைய சொற். களைப் புதிய சிந்தனைக்கு வளைத்த கவிதை அது.

பாரதிக்கு மிகவும் விருப்பமான வார்த்தை சக்தி' என்பது அவனுடைய கவிதைகளில் கிரம்பியிருப்பதும் 'சக்தி'தான். அந்தப் பதத்தைப் பல இடங்களில் ஸ்தூல: மாக ஆண்ட அவன் சூட்சுமமாகவும் வைத்திருக்கிருன். அவனுடைய கவிதைகளில் சக்தி தாண்டவமாடுகிறது. அங்கே சொல்லுக்கு வலிமை அதிகம். பொருளுக்கு ஆற்றல் அதிகம். புதுமைக்கு இடம் அதிகம். பண்டிதர்களிடம் இருந்து தமிழுக்கு விடுதலே, சகாதனிகளிடமிருந்து சமயத் துக்கு விடுதலை, கோட்பாடுகளிலிருந்து சமூகத்துக்கு விடு தக்ல, கடிப்புச் சுதேசிகளிடமிருந்து சுதேசிகளுக்கு விடுதலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/32&oldid=598008" இலிருந்து மீள்விக்கப்பட்டது