பக்கம்:புதிய பார்வை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43

கூறும்போது அடிமைப்பட்டு அங்கியர்வசம் சிக்கியிருக்கும் பாரத தேசத்தை கிளேவு கூர்ந்தவன் போன்ற ஆவேசம் அவன் காவியக் கவிதையில் வங்துவிடுகிறது. வீமன், அர்ச்சுனன், விகர்ணன் பாத்திரங்களைப் படைத்துள்ள முறைகளில்கூட ஒரு புதுமை தெரிகிறது. இந்தப் பாத்தி ரங்கள் பழைய பாரத காவியங்களில் இத்தனே வீரியமாக வும் சுதந்திரமாக கிமிர்ந்து கின்று பேசும் தன்மை உடைய வர்களாகவும் படைக்கப்படவில்லை. பாரதி இப்படிப் படை த்த பாத்திரங்களிலும் ஒரு புதுமையைச் செய்திருக் கிருன். முதல் முதலாகச் சுயசரிதையை நவீன கவிதையில் எழுதிய புதுமையையும் பாரதிதான் செய்திருக்கிருன். கவிதைகளில் செய்த புதுமையைத் தவிரத் தமிழில் தனக்கு முன்னும் பின்னும் இல்லாத கவித்தன்மை வாய்ந்த பல அழகிய புதிய பதச் சேர்க்கைகளையும் பாரதி படைத்திருக் கிருன், இன்பக்கேணி, துன்பக்கேணி, அன்னமூட்டிய தெய்வ மணிக்கை, முடம்படு தினங்கள், தெய்வ நாட்கள், பாரத சமுதாயம், மூத்த மொய்ம்மைகள், இங்கித காத கிலேயம், மணிப்பெருங் தெப்பம் என்றெல்லாம் புதுப்புதுப் பதச் சேர்க்கைகளிலேயே தமிழுக்குச் சக்திமிக்க கவிதை வடிவம் தருகிருன் பாரதி. சிறுகதை மன்னர் புதுமைப் பித்தன் தம்முடைய கதை ஒன்றிற்குப் பாரதியிடமிருந்து கிடைத்த "துன்பக்கேணி என்ற பதச் சேர்க்கையையே திலைப்பாகப் போட்டிருக்கிருர். தனக்குப் பின்னல் வரும் இலக்கியக் கர்த்தாவின் பிரியத்தையும் ஆர்வத்தையும் அடையும்படியான பதங்களைச் சேர்க்கிற கவி மாபெரும் திறமை வாய்ந்தவனக இருந்தாலொழிய அப்படிப் பெருமை கள் கிடைக்காது. இந்தப் பதச் சேர்க்கை என்ற புதிய சக்தியுள்ள தமிழிலுைம்,

"பொய்க்கும் கலியை நான்கொன்று

பூலோகத்தார் கண்முன்னே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/45&oldid=598034" இலிருந்து மீள்விக்கப்பட்டது