பக்கம்:புதிய பார்வை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~48 புதிய பார்வை

தனித்தமிழ் இயக்கம் ஒன்று எழுவதும் அடங்குவதுமாகத் தமிழகத்தில் இருந்து வருகிறது. பாரதியின் உரைகடை .யிலும், கவிதையிலும்கூட வடசொற்கள் அதிகமாக விரவி விட்டனவே என்று சில மெத்தப் படித்த அதிமேதாவிகள் கவலைப்படுகிருர்கள். பாரதி கம்பனைப்போல் வள்ளுவனைப் போல்' என்று பாடியிருக்க முடியாது 'காப்பியனேப் போல்' என்றே பாடியிருக்க வேண்டும் என்று சிலர் பாரதி பாட்டைத் திருத்தும் குறும்பு வேலைகளில்கூட ஈடுபடுகிருர் கள். புதிய தமிழின் வளர்ச்சியை ஒவ்வொரு காலத்திலும் மொழி வெறியாளர்களின் எதிர்ப்பு பாதித்திருக்கிறது. அதைவிட அதிகமாகப் புதிய வளர்ச்சி என்ற ஆர்வத்திலே மொழி வெறியும் பாதிக்கப்பட்டு அவ்வப்போது நசுங்கி

யிருக்கிறது.

சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், தலையங்கம், உபதலையங்கம், செய்தி விமர்சனம், கலை விமர்சனம், பிரசங்கம், கருத்தரங்கு, பட்டிமன்றம், கவி அரங்கம் ஆகிய கவீன சமூகத் தேவைகளே நோக்கி இலக்கியம் படைப்போர் திரும்புகிற காலம் இது. இன்றைய மனிதனின் தாய்மொழி எதுவாயினும் உலகின் சகல கலாசாரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் அவன் மோதுறுவதனால் அத்தனே மோதல்களும், அவனுடைய எழுத்து கடை, பேச்சுநடை யைப் பாதிக்கின்றன. இந்த பாதிப்புக்களைத் தவிர்த்துப் படைக்கப்படும் இலக்கியத்தின் எங்த அம்சமும் தன் காலத்துச் சூழ்கிலேயைப் பிரதிபலிக்காத போலித் தன்மை .உடையதாகிவிடும். பாரதிக்குப்பின் உண்டாகிய எழுச்சியே பாரதிக்கு முன் உண்டாகி நீண்டகாலமாகக் கவனிப்பாரம் .றக் கிடங்த பழந்தமிழ் இலக்கியங்களையும் யாவரும் தேடிப் படிக்கச் செய்தது. பண்டிதர்கள் மட்டுமே தேடிப் பார்த்து வங்த பழைய இலக்கியங்கள், பதிப்பிக்கப்பட்டு மலிவுப் :பதிப்புக்களாகவும் வெளிவந்து பாமரர் கைகளையும் எட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/50&oldid=598044" இலிருந்து மீள்விக்கப்பட்டது