பக்கம்:புதிய பார்வை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 65 .

தாக எனக்குத் தெரியவில்லே. மாயை' என்ருல் மாய வரத்தை E&னப்பதா அல்லது மாயை' என்ற வேதாந்த மொழியை நினேப்பதா? 'பாவூர் என்பதைப் பாவை" என்ருக்குவதும் இப்படித்தான். பொருட் குழப்பத்தை யும், சொல் மயக்கத்தையும் பிறழ்ச்சியான பிரயோகத்தை யும் கூடியவரை தவிர்க்க வேண்டும். தமிழ் மொழிக்கு , ஒசய்யும் தொண்டுகளில் அது தலேயாயது.

இனி புதிய தமிழில் சில அழகுகளும் ஏற்பட்டுள்ளன. ஒரு கதையில் இருவர் உரையாடுவதாக வரும் கட்டங்களில் ஒருவர் ஒரு கேள்விகேட்டு இன்னெருவர் வெறுப்பினுலோதியிஞலோ பதில் கூருமலிருந்தால் பதில் கூறவில்லை. அவன் -என்று எழுத்தில் எழுதாமலே "..............."என்று புள்ளிகளையும், மேற்கோள் குறிகளேயும் (கொட் டேஷன்) போட்டு எழுதாத வாக்கியமே அர்த்தபாவத்தை உண்டாக்கும் அழகைப் புதிய தமிழில் காண்கிருேம். -

உரையாசிரியர்கள் காலத்து உரை கடையில் Laவிஜனயெச்சங்களே அடுக்கி ஒரு பக்கம் முழுவதுமே ஒரே தமிழ் வாக்கியம் இருக்கும்படி எழுதினர்கள். பாடல்களில் கூடக் குளகப்பாடல்கள்' வர்தன. அத்தகைய காலத்துக்கு, முன்பே இளங்கோவடிகள். - -

என்ருள். எழுந்தாள். இடருற்ற இக்கை நின்ருள், கினைந்தாள்.

என்று ஒவ்வொரு வினே முற்ருக அடுக்கும் சிறிய வாக்கியப் பிரயோகத்தைக் காவியத்தின் உணர்ச்சிகரமான கட்டத். இல் பயன்படுத்தியிருக்கிருர் எழுவாயும் கூடத் தோன் ருது எங்கோ கிற்கும்படி வெறும் வின முற்றுக்களாக இடுக்கப்பட்டுள்ள இந்த வாக்கியங்கள் அம்பின் நுனி ஆப் போல் எத்தனை கூர்மையாயிருக்கின்றன பாருங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/67&oldid=598080" இலிருந்து மீள்விக்கப்பட்டது