பக்கம்:புதிய பார்வை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“势6 புதிய பார்வை

"நீயே, அலங்குளேப் பரீஇ இவுளிப் பொலங் தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கடல் கிவங் தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினமாதோ'

(புறம் 4)

என்று ஒர் அரசன் தேரில் தோன்றும் காட்சி சூரியோதயத் .துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. சூரியோதயத்தின் அழகை கன்ருக அநுபவித்து ஒப்பிட்டிருக்கிருர் இதைப் பாடிய புலவர்.

பத்துப் பாட்டில் முதற் பாட்டாகிய திருமுருகாற்றுப் * }65) L-,

'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு" ஒவற விமைக்கும் சேண்விளங்கு அவிரொளி.

என்று சூரியோதயக் கவினைச் சொல்லித் தொடங்குகிறது. இந்த முதல் மூன்று வரிகளுக்கு உரையெழுதிய நச்சினர்க் கினியர், பலர் புகழ் ஞாயிறு = எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை-என்று எழுதியிருப்பதிலிருந்து இக்து மதத்தின் உட்பிரிவுகளான எல்லாச் சமயங்களும் சூரியனை வழிபடுவதில் ஒரே விதமான ஒத்த கருத்துடையவைகளே என்பது பெறப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில்

ஒன்ருகிய சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில்,

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்' -

(சிலப்பதிகாரம்-மங்கல வாழ்த்து) என்று சூரியனும் போற்றப்படுகிருன். காவிரி, மழை, .முதலியவற்ருேடும் சூரியனேப் போற்றுகிருர் இளங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/98&oldid=598144" இலிருந்து மீள்விக்கப்பட்டது