பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பூமத்திய ரேகைக்கு அருகில் ஒரிடத்தில் இருப்பதி லிருந்து நமது பார்வையே வேறுபட்டிருக்கும். நமது கூட்டுச் சேராக் கொள்கை கமது பார்வையை மறைத்து, அபாயங்களை அறிய முடியாதபடி செய்கின் றதா? இல்லை என்பது வெளிப்படை. ஆல்ை அபாயங் களைக் குறைப்பதற்கு இந்த முறையில் சிந்தனை செய் தல் நலமாயுள்ளது, போர் செய்யாமல் இரு கட்சியினர் தத்தம் வலிமையைப் பரீட்சித்துக் கொண்டிருக்கும் பனிப் போர் என்ற கிலேமையைக் காட்டிலும் இது மேலானதாகும். -புதுடில்லி, தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் நிகழ்த் திய சொற்பொழிவு, 27-4-1960. , இந்தியா ஏதாவது ஒரு வல்லரசுடனே அல்லது வல்லரசுகளின் கூட்டத்துடனே சேராமலிருப்பது ஏன் என்று என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது, அப் படிச் செய்யாததால், காம் மதில் மேலேயே அமர்க் திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தக் கேள் வியும், வியாக்கியானமும் தெளிவாய்ப் புரிந்து கொள் ளக்கூடியவையே, ஏனெனில் அபாயகரமான காலத் தில், அந்த அபாயத்தில் சிக்கியிருப்பவர்கள் அமைதி யாக ஒதுங்கி அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுடைய போக்கு அறிவுக்குப் பொருத்தமில் லாத தாகவும், அற்ப நோக்கமுடையதாகவும், ஆக்க வேலைக்குப் பயனற்றதாகவும், பிரத்தியட்ச உண்மை யைக் கவனிக்காததாகவும், வீரமற்றதாகவும் கூடத் தோன்றுவது இயற்கை. ஆல்ை இந்தியா பின்பற்ற விரும்பும் கொள்கை எதிர்மறையாகவும், கடு கிலே யாகவும் உள்ளதன்று. அது கேர் கிலேயாக உள்ளது,