பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 மனிதர்களுடைய கையில் மிக அதிகமான சக்தி ஒப் படைக்கப்படுகின்றது. ஆனல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான அளவுக்கு ஒழுக்க நெறி அவர்களுக்கு வேண்டும் என்று வற்புறுத்தப்பட வில்லை. இது (இயந்திர யுகத்தின்) ஒரு பிரசினை. மற்றெரு பக்கம் பார்த்தால், இன்று ஒரு காடு அழிந்து விடாமல் வாழ வேண்டுமானல், அங்கே போதிய அளவில் விஞ்ஞானிகளும், பொறி நுட்பங்கள் தெரிந்தவர்களும் இருக்கவேண்டும். இதுவும் மிக முக்கியமான விஷயமாகும். -புதுடில்லி இந்தியப் பொது ஆட்சிமுறை இன்ஸ்டிடியூட் டில் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு, 6-4-1957. o: # 事 வானத்தில் பறத்தல் சரித்திரத்தைத் தொலைவில் இருந்து கொண்டு பார்த்தால், ஆகாயத்தில் அடைந்துள்ள இந்த வெற்றி யானது மனித சமுக வரலாற்றையே மாற்றி யமைக் கும் நிகழ்ச்சிகளில் ஒன்றகும்...... பூமியின்மேல் தரை யிலே ஊர்ந்து கொண்டிருக்கும் மனிதன், இரண்டு பக்கங்களில் மட்டும் செல்லக் கூடிய நிலையிலிருந்து, மூன்றவது பத்கத்திற்கும் திடீரென்று மேலே பாய்ந்து செல்ல முடிகின்றது. அவனுடைய உள்ளமும் அதே போல மேலே பாய்ந்து சென்றதா இல்லையா என்பது எனக்கு உறுதியாய்த் தெரியாது; அப்படிச் சென் றிருந்தால், எல்லாம் கலம்தான். ஆனால், எப்படியோ மனிதர்களின் மனங்கள் செல்வதற்கு முன்பே நிகழ்ச்சி கள் தோன்றி விடுகின்றன. மனங்களே பின்தங்கி நிற்க கேருகின்றது. பல விஷயங்களைச் செய்து முடிக்கத் தேவையான பொருள்கள் யாவும் நமக்குக் கிடைக்கின்றன. பல வகையான பெருஞ் செயல்களை 9 G 0-14