பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 அமைப்பும், புதிய தொழில்களுக்கு ஏற்றபடி மாறித் தீரவேண்டி யிருக்கின்றது. ஆகவே தற்கால வாழ்க்கையில் புரட்சிகரமான விஷயங்களில் முதன்மையானது தத்துவக் கோட் பாடு அன்று, ஆல்ை பொறி இயல் வளர்ச்சியே யாகும். பொறி இயல் மாறுதல் மெதுவாக ஏற் பட்டால், பழைய அமைப்புக்கள் இருந்து வரும். தொழில் வளர்ச்சி யில்லாத பிற்போக்கான சமூகம் பிற்போக்கான சாதனங்களையும், சமூக அமைப்பை யும் கொண்டிருக்கும். அந்தச் சமூகம் தற்கால விஞ் ஞான யுகத்துடன் பொருந்த முடியாதபடி அவை செய்து விடும். ஆயினும் எப்படியும் மாற்றம் வந்தே தீரும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுத்து வைக்க இயலாது. இந்த மாறுதல் சில சமயங்களில் திடீரென்று ஏற்பட்டு, எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்து விடுகின்றது, அவ்வாறின்றி அது மெது வாகவும் வந்தே தீரும். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959.

  1. o H

உற்பத்திப் பெருக்கம் விஞ்ஞானமும் நுட்பமான பொறிகளைப் பற்றிய அறிவும் பெற்றுள்ள முன்னேற்றம் உலகத்தின் பெரும் பாலான பொருளாதாரப் பிரசினைகளைத் தீர்த்துவைக்க வழி செய்கின்றது. முக்கியமாக உலகம் முழுவதிலு முள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக்கு அத்தியா வசியமானவைகளை அளிக்க அந்த முன்னேற்றத்தால் முடியும். வாழ்க்கைத் தரங்கள் உயரும் என்பதற்கும், கலாசார வளர்ச்சிக்கும் அதன் மூலம் கம்பிக்கை பிறக் கின்றது...