பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 திரிகைகள் இதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர் களுடைய நன்மையான அமிசம் வளரும்படி செய்து வந்தால், இந்தியா மேலும் மேலும் உணர்ச்சி பூர்வ மான ஒற்றுமையை அடைய உதவியாயிருக்கும். இவ் வாறு அவைகள் பெருந் தொண்டு செய்ய முடியும். கம் எல்லோருக்கும் பொதுவான பழைய பெருமைகளை எண்ணுவதோடு, இப்பொழுது காம் கட்டி வரும் இந்தியாவைப் பற்றியும் நினைத்துக் கொள்வோம், இது வும் நம் எல்லோருக்கும் பொதுவானதுதான். இவ் வாறு மக்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் பத் திரிகை ஆசிரியர்கள் தாங்களும் பயனடைவார்கள். -புதுடில்லியில் அகில இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் மகாநாட்டில் பேசியது, 18-8-1954. Iki * # பத்திரிகைகளும் சிந்தன சக்தியும் நாம் வசித்துக்கொண்டிருக்கும் இந்தச் சகாப்தத் திலே, வெளிப்படையாகத் .ெ த ரியும் விளைவுகளில் ஒன்று மக்கள் படிப்படியாகச் சிந்திக்கும் கலையையே மறந்து வருவது. அவர்கள் மற்றவர்களுடைய அபிப்பிராயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின் றனர். சர்வாதிகார நாடுகளில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும், மக்கள் தாங்கள் வாழ்ந்து வரும் நிலைமை களால் ஒரே மாதிரியான அபிப்பிராயங்களைக் கொள் ளும்படி பயிற்சியாகி விடுகின்றது. அவர்கள் சிந்திக் கும்படி விடப்பட வில்லை. எவராவது பெரும்பான்மை யோருடைய கருத்துக்கு மாறுபட்டால், மிகவும் கஷ் டந்தான். அவருக்கு விரோதமாகச் சட்டம் எதுவு மில்லை, ஆயினும் நடக்கின்ற விஷயங்கள் அவருக்கு எதிராகவேயிருக்கும். இந்த விஷயத்தில் பத்திரிகைகள் மிகவும் பயனுள்ள தொண்டு செய்ய முடியும். ஆல்ை