பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமெரிக்கரின் அரிய குணங்கள் வெளி உலகத்திலிருந்து பார்ப்பவர்களுக்குச் சாதாரண அமெரிக்கர் ஒருவர் மன இளக்கமில்லாதவ ராயும், காரியத்திலேயே கண்ணுயுள்ள திறமை மிகுந்த வியாபாரியாயும், பணம் தேடுவதே நாட்டமாகி, கிடைத்த பணத்தைக் கொண்டு தம் வலிமையையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்ள விரும்புபவரா யும் காட்சி யளிக்கிறர். இதில் ஒரளவு உண்மை இருக்கிறது. மற்றெரு புறத்தில் வேறெரு காட்சி தென்படுகின்றது. அன்பு நிறைந்த இதயங்களுட னும், அளவற்ற தாராள மனப்பான்மையுடனும், மற்ற வர்களிடம் கல்லெண்ணத்துடனும், இந்தப் பெரும் குடியரசின் அடிப்படைத் தத்துவங்களான சுதந்தரம், சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றில் உறுதியான கம்பிக்கையுடனும் உள்ள மக்களைக் காண்கிறேம். இந்தக் காட்சியை நான் சென்ற இடமெல்லாம் கண்ட தில் மகிழ்ச்சி யடைகிறேன். இதிலிருந்து அமெரிக்கா வின் உண்மையான ஆற்றல் எதில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடிகின்றது. எல்லா இடங்களிலும் சுதந்தரத்தில் ஆசையும். சமாதானத்தி லும் ஒத்துழைப்பிலும் ஆசையும், மக்களிடையே கபட மில்லாத போக்கும், மனிதப் பண்பாட்டோடு எதையும் நோக்குதலும் அவர்களை அன்போடு தெரிந்து கொள்ள உதவியா யிருக்கின்றன. இத்தகைய போக்கைக் 960–18