பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 ஜனவரி 26-ஆம் தேதியில் இந்திய மக்கள் கோடிக் கணக்காகக் கூட்டி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவு செய்ய உறுதி செய்து கொண்டிருக்கின்றனர், நேர்மையாக ஆளாமல், தங்களை நசுக்கி வந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ம க் க ளு க் கு த் தொன்று தொட்டே அமைந்துள்ள உரிமையை அவர் கள் பிரகடனம் செய்துள்ளார்கள், ஈவிரக்கமில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களைக் கொடுமையாக ஆண்டு நசுக்கிக் கொள்ளே யடித்து வந்ததாயும், தங்களுக்கு அரசியலிலும், பொருளாதாரத்திலும், கலாசாரத்திலும், ஆன்மீகத் துறையிலும் சீர்திருத்த முடியாத அளவில் பெருங் தீங்கு விளைவித்திருப்பதா யும் அவர்கள் அதன் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தகைய உறுதியை மேற்கொண்ட பின்னர், இனி எந்த இந்தியனும் பிரிட்டிஷ் அதிகாரத்திற்குத் தான கப் பணிந்து கொடுக்கும் பிரசினேயே இருக்க முடி யாது, பிரிட்டிஷ் ஆட்சி இருப்பதாகவே அவன் அங்கீ கரிக்க முடியாது; எங்களில் சிலர் எதிரியுடன் சேர்க் தாலும், போராட்டம் கடந்து கொண்டிருக்கையில் எதிரியுடன் பேரம் பேசினலும், அத்தகைய இழிவான ஆன்மீக நிலைக்கு வரும்படி செய்திருப்பதும் பிரிட் டிஷ் ஆட்சியின் பயங்கரமான தீமைதான்; அது தங் களை அடிக்கிற தடியை முத்தமிடும்படி செய்திருக் கிறது, தங்களைப் பிணித்துள்ள சங்கிலிகளையே சேர்த்து அனைத்துக் கொள்ளவும் செய்திருக்கிறது. இப்படி வழி தவறிச் செல்லும் எங்கள் காட்டவரில் சிலர், முக்கியமாகத் தேவையுள்ள சந்தர்ப்பத்தில் தாய் ாாட்டைக் கைவிட்டு விட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்துடன் சமரசம் பேச முற்பட்டிருக்கின்றனர். .டி.ல்ை தேசம் எங்கள் மாபெரும் தலைவரின் அலோசனைப்படியும் உத்தரவுப்படியும் வேறு வழியை மேற்கொண்டிருக்கின்றது. வெற்றி கிடைக்கும்வரை