பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 வெற்றி கிட்டும்வரை, எவ்வித அமைதியோ சமா தானப் பேச்சோ இருக்க முடியாது.” விசாரணை முடிவில் மாஜிஸ்திரேட்டால் ஜவாஹர் லால் நேருவுக்கு இரண்டு வருடக் கடுங்காவலும்,ரு.500 அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஆறுமாதக் கடுங்காவலும் விதிக்கப்பட்டது. Fo 事 # ஏழாவது விசாரணை 1932-ஆம் வருடத்தில் மட்டுமே 66,946-காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் சிறை புகுந்திருந்தனர். அரசாங்க அடக்கு முறைகள் தாண்டவ மாடிக்கொண் டிருந்தன. 1933-ல் கல்கத்தா நகரில் காங்கிரஸ் மகா சபைக் கூட்டம் கடப்பதாக இருந்தது. பண்டித மதன மோகன மாளவியா அதற்குத் தலைமை வகிக்க ஏற்பாடாகியிருந்தது. அந்த மகாகாட்டில் கலந்து கொள்வதற்காக வெளி மாகாணங்களிலிருந்து வந்த பல பிரதிநிதிகளை அரசாங்கத்தார் வழிகளிலேயே தடுத்துக கைது செய்தனர். எனினும், ஏப்ரல் மாதம் 1-தேதி சுமார் 1,500-பிரதிநிதிகள் கல்கத்தாவில்கூடி, திருமதி நெல்லி சென்குப்தா தலைமையில் மகா காட்டை நடத்தி விட்டனர். அந்தச் சமயத்தில் போலீஸ்காரர்கள் புரிந்த அட்டுழியங்களுக்கு அளவே யில்லை. அவைகளைப் பற்றி மாளவியாவே விரிவான அறிக்கை வெளியிட்டாார். பிரதிநிதிகளிலே பலர் தடியடியால் மண்டைகள் உடைந்தும், அங்கங்கள் சிதைந்தும் பெருந் துன்பங்களுக்கு உள்ளாயினர். மேலும், வங்காளத்தில் புரட்சிக்காரர்கள் இடையி டையே பலாத்காரத்தைக் கைக்கொண்டு பயங்க