பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அந்தத் தெய்விக அக்கினியிலிருந்து காமும் ஒரு பொறியை எடுத்துக் கொண்டுள்ளோம், அது அவர் வகுத்த வழியில் ஒரளவு வேலை செய்யும்படி செய்து நமக்கு வலுவையும் அளித்துள்ளது. பெரிய மனிதர் களுக்கும் மேன்மையுற்றவர்களுக்கும் வெண்கலத்தி லும் சலவைக் கல்லிலும் சிலைகள் வைக்கப் பெறுகின் றன, ஆனல் தெய்விக அக்கினியுடைய இந்த மனிதர் தம் வாழ்நாளில் கோடிக்கணக்கான இதயங்களில் எப் படியோ குடிபுகுந்து விட்டார், அதல்ை நாம் எல்லோ ருமே அவர் எதல்ை உருவாக்கப் பெற்றிருந்தாரோ அதே பொருளாக ஒரளவுமாறிவிட்டோம், ஆல்ை தெய் விகத் தன்மை மட்டும் நம்மிடம் அளவில் குறைந்திருக் கும். இவ்வாறு அவர் இந்தியா முழுதும், அரண்மனை கள் கட்டுமின்றி, குறிப்பிட்ட இடங்கள், சபைகள் மட்டு மின்றி, ஒவ்வொரு கிராமத்திலும், தாழ்த்தப்பட்டவர் குடிசையிலும், கஷ்டப்படுவோர் இடங்களிலும் புகுந்து பரவி நின்றர். கோடிக்கணக்கான இதயங்களில் அவர் வசிக்கிறர், எண்ணற்ற சகாப்தங்கள் அவர் வாழ்ந்து கொண்டே யிருப்பார். -அரசியல் நிர்ணய சபையில் பேசியது, 2-2-1948. + # மகாத்மா காந்திக்கு ஜே ! நாம் எத்தனை முறை மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று கோஷித்திருக்கிறேம். இப்படிக் கோவித்ததில் நாம் கம் கடமையை முடித்து விட்டோம் என்று எண் ணிக் கொண்டோம். இந்தக் கோஷத்தைக் கேட்டு அவர் எப்பொழுதும் வருத்தப்பட்டு வந்தார், ஏனெனில் அது வெறும் கோஷம் என்றும், சிந்தனை செய்வதற்கும் செயல் புரிவதற்கும் பதிலாக அது கோஷிக்கப்படு கிறது என்றும் அவர் தெரிந்திருந்தார். மகாத்மா