பக்கம்:புதையலும் பேழையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் . ŠË

கேணி வேறு கிணறு வேறு என்பதை நிகண்டுகளும் பிரித் துக் கூறிப் பேசுகின்றன. மணிமேகலையும், -

'எந்திரக் கிணரும் ... ... கரப்புநீர்க் கேணியும்: என வெவ்வேறு நீர் அமைப்புகளாக அறிவிக்கின்றது.

மேலே காணப்பட்ட குளம் தமிழ்நாட்டில் எங்கனும் பரவ லாக அமைந்துள்ள நீர்நிலை. குளம் என்னுஞ் சொல்லும் தமிழ் நாடு முழுதும் வழங்கப்படும் சொல். திருவள்ளுவர் இச்சொல்லைக் கையாண்டுள்ளார். 3 -

'கிணறு என்னும் சொல்லும் கேணி என்னுஞ் சொல்லும் எங்கும் வழங்கப்படினும் கிணறு எங்கும் பெரு வழக்காகவும் கேணி இராமனாதபுர மாவட்டத்தின் பெரு வழக்காகவும் பிற இடங்களில் அருகிய வழக்காகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது.

சிறப்பாக இக்கேணியமைப்பு இராமனாதபுர மாவட்டத்தில் மட்டுமே பழங்காலம் முதல் நடைமுறையில் அமைந்து அன்றாடப் புழக்கத்திலும் உள்ளதாகும், இன்றும் நாற்கொணவடிவில் 20 அடிக்கு மேலும் நீள அகலங்களைக் கொண்டனவாகக் கேணிகள் அமைந்திருப்பதையும் புழக்கத்தில் இருப்பதையும் காணலாம், இக் கேணியில் கீழே இறங்கி நீர் முகந்து வருதற்குக் கருங்கற்கனால் நீட்டப்பட்ட படிகள் உள. இவற்றிற்கெல்லாம் மேலாக இக் கேணி என்பது மணற்பாங்கில் மட்டும் தோண்டப்படுவது என் பதை நினைவிற்கொண்டு, -

"தொட்டனைத் தூறும் மணற்கேணி" என்னும் குறளில் கேணி மணற்கேணி எனக் குறிக்கப்படுவதை இணைத்துப் பார்க்க வேண்டும். இது போன்ற கேணி அமைப்பு முற்காலத்தில் பிற மாவட்டங்களில் அமைந்தமைக்குச் சான்றுகள், அறிகுறிகள் இல்லை. பெருங்கிணறுகள் இருந்துள்ளன. பிற்காலத் தில் வடக்கு மாவட்டங்களில் கரம்பை நிலங்களை நன்செய், புன்செய்யாக்கி நீர் பாய்ச்சுதற்கு இதுபோன்ற பெருங்கேணிகள்

1 மணி : சிறை : 1.02, 104,

2 அளவளாவில்லாதான் வாழ்க்கை குளவளகக்

கோடின்றி நீர்நிறைத் தற்று - குறள் : 528,

8 குறள் , 396 ‘. . . . . . . . .