பக்கம்:புதையலும் பேழையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிதிலும்

முயற்சியும் சுவையும்.

உள்ளத்தாலும் செவியாலும் கண்ணாலும் சுவைக்கத் தமிழை மூன்றாக கண்டவன் தமிழன்; முத்தமிழாகச் சுவைத்து மகிழ்ந்தவன். இதுபோன்றே வாயாற்சுவைக்க வேறு மூன்றையும் கண்டான். அவை முக்கணிகன். மா, பலா, வாழைக்கனிகள் இல்லாத விருந்து விருந்தாகாது. சுவைகளில் தேர்ந்த இக்கனி களை உணவிற் கண்டு சுவைத்ததோடு மட்டுமன்றி வழக்கிலும் வைத்துப் பேசிக் களித்தவன்.

பலாக்கனியது சுவையின் பெருமையை விளக்கும் போக்கில் வேறு ஒரு கருத்தையும் விளக்க, பலாக்கனியில் ஈ மொய்த்தாற் போல’-என உவமையாக்கிப் பேசினன்.

'மாங்கனி போன்ற கன்னம்-என்று இன்பத் தினவோடு உவமை யாக்கின்ை.

இவ்வாறு இரண்டு கனிகளையும் சுவை மகிழ்வோடு பெருமைகளாக உவமை கூறியவன் வாழைக்கனியை உவமையில் வைத்து வழங்கிய வழக்கு ஒரு சுவை, மற்றொரு கருத்தையும் கொண்டதாகின்றது. வாழைப் பழச் சோம்பேறி - என்று சோம்பேறிக்கு உவமையாகக் கொண்டதுதான் உன்னத் தக்கது.