பக்கம்:புதையலும் பேழையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 97

இவ்வுண்மைக்குச்சான்றோரும், அறிஞரும், தேர்ந்த உழைப் பாளரும் விலக்கானவர். ஆனால், பண்டைச்சான்றோர் மாந்தனின் எளிதிற் பயன்கொள்ளும் தன்மையை நன்றாக உணர்ந்தவர். தாம் கூறும் அறவுரைகள் எளிதாக நடைமுறைப்படும் முறையை உள்ளத்திற்கொண்டே அறக்கருத்துகளை வெளியிட்டனர்.

பாரதி எளிமை.

ஒர் எளியவன் அறஞ்செய்ய விரும்பினான். சிறு முயற்சியும்

இன்றி எளிதிற் செய்யும் அறம் ஒன்றை அறிய விரும்பினான்.

பாரதியாரைப் புதுச்சேரியில் கண்டான். நேரே உசாவினான்:

(இது உண்மை கலந்த கற்பனை)

'கவிஞர் பெருமானே! பாரதிப் பாவலனே! யான் அறஞ் செய்யவிரும்புகின்றேன். மிக எளிதாகச் செய்யத் தக்க ஒன்றைக் கூறுக-என்றான். -

பாரதி : வா, பாண்டியா; அப்படியா? 'இன்னறுங்கனிச்

சோலைகள் செய்'யலாமே..?

rດກົມຫມr : அதற்குச் செடிகொடிகள் வளர்க்க வேண்டுமே;

பெரும் முயற்சி வேண்டுமே.

பாரதி : "இனிய நீர்த்தண் சுனைகள் அமை'க்கலாம்.

எளி : குளம் தொட்டன்றோ வளம் பெருக்கவேண்டும். - வெறுங்கை முழம் போடாதே, பாவலரே?

பா : 'அன்ன சத்திரம் ஆயிரம்" வைக்கலாம். - எளி : சோறு சமைக்க வேண்டும்; நூறுநூறாகப் பணம்

வேண்டும். பெரும் முயற்சி ஆகுமே. பா: 'ஆலயம் பதினாயிரம் நாட்டலாம்' - - எளி: இதோ பார் பாரதி எளிதாக ஒன்று சொல் என்றேன். மிக அரிதானவைகளையே சொல்லி என் சினத்தைத் துண்டுகின்றாய்.

- 1. பாரதியார் கவிதைகள் : வெள்ளைத்தாமரை : 9, * - ...

பே.