பக்கம்:புதையலும் பேழையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 105

மாறுபட்டதுதான். அருளில் நிறைந்த நபியவர்களது உள்ளம் இக்கொலை உணவில் நிறைவாகத் தோய்ந்திருந்ததாகக் கூற முடியாது. உயிர்களது துன்பங்களை எண்ணி உருகும் அவர் உயிர்க்கொலைபற்றிய மாறுபட்ட கொள்கையையே கொண்டிருந் தார் எனலாம்.

ஒரு முறை ஒருவர் நபியவர்களை அணுகினார். தம் வீட்டில் விருந்தின. பலர் வந்துள்ளனர் என்றும், அன்னார்க்கு எவ் வகையான உணவளிப்பது என்றும் உசாவினார். அவர் அதனை நபிகள்பால் வினவியதன் நோக்கமே ஒருமுறை நபி பெருமான் உயிர்க்கொலைபற்றி அறிவித்த கருத்தின் எதிரோலியேயாகும்.

வந்தவர் : நபி பெருமானே! விருந்தினர் வந்துள்ளனர். - நான் என்ன இறைச்சி உணவை, எப்படிப்

படைப்பது?

நபி : இதற்குமுன் விருந்தினர் வந்திருப்பாரே!

வந் : வந்துள்ளார்கள். நால்வர் முன்னொரு முறை

வந்தார்கள். -

நபி : அப்போது எப்படி விருந்து செய்தீர்?

வந் : இரண்டு கோழி அடித்து விருந்து செய்தேன். நபி : அப்படியா? Tr ஒரு வான் கோழியை அடித்

திருக்கலாம். -

வந் : பின்னொருமுறை பத்துபேர் வந்தார்கள். அப்போது

இரண்டு வான்கோழிகளை அடித்தேன். நபி : இரண்டை அடித்திருக்க வேண்டியதில்லை. ஒர்.

ஆட்டை அடித்திருக்கலாம். வந் : 20 பேர் ஒருமுறை வந்தபோது இரண்டு ஆடுகளை

அடித்தேன்.

நபி : அப்போது ஒரு குதிரையை அடித்திருக்கலாம். வந் : குதிரைகளும் அடித்திருக்கின்றேன். - ஐம்பது பேர் வந்தபோது இரண்டு குதிரைகளையும் பத்து கோழி களையும் அடித்தேன்.