பக்கம்:புதையலும் பேழையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடில் உர்ை.

'கவிஞர்கோ’ கோவை. இளஞ்சேரனாரது நூல்களை வெளியிடுவது கலைக்குடில் வெளி யீட்டகம். இப்புதையலும் பேழையும் எட்டாவது வெளியீடு. இது பன்னிரண்டு ஆய்வுக் கட்டுரை களின் தொகுப்பு நூல். இக்கட்டுரைகள் இதழ் களிலும் மலர்களிலும் பல காலச் சூழல்களில் வெளி வந்தவை, -

جليو

முல்லை இதழில் கரும்ணி பதித்த அச்சாக இந்நூற் பதிப்பு அமைந்துள்ளது. பதித்த குருகுலம் அச்சகத்தார் விரும்பும் வகையெல்லாம் ஒன்றி நின்று. அச்சேற்றினர். விற்பனை உரிமையைச் சென்னை (இ) ராக் போர்ட்டு பதிப்பகத்தார் ஏற்றுள்ளனர். அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி படைக்கின்றோம். இப்பதிப்பின் தனி அமைப்புகளைக் குறிப்பிட வேண்டும். - - -

சொல் ஆய்வு, புதையல், அதன் அறிகுறி பானை. பொருளாய்வின் அறிகுறி பேழை. இவை பொது முகப்பாகவும், தனித்தனிப் பகுதிகளின் முகப்புகளாகவும் வண்ண அச்சில் பளிச்சிட்டுக் காட்டப்பட்டுள்ளன. o

கட்டுரை ஒவ்வொன்றும் தலைப்பின் விளக்க முகப்பையும், கட்டுரையின் மூலப் பின்னணியையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும், நூலின் பெயரும் ஆசிரியர் பெயரும் பதியப்பட்டுள்ளன.

இந்நூற் கருத்துகளில் தோய்வதன் வாயிலாக மேம்பட்ட மரபுகளின் உணர்வைப் பெறவேண்டும் என்னும் விருப்புடன் இதனைத் தமிழ்ப் பெருமக்கள் முன் வைக்கின்றோம். - - கலைக்குடிலார்,