பக்கம்:புதையலும் பேழையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 12?

சித்திரை, வைகாசி – இளவேனிற் பருவம்

ஆணி, ஆடி - முதுவேனிற் பருவம் (கோடைக்காலம்) ஆவணி, புரட்டாசி - கார்ப் பருவம் (மழைக்காலம்) ஐப்பசி, கார்த்திகை - கூதிர்ப் பருவம் (நடுக்கும் குளிர் காலம்) மார்கழி, தை - - முன்பணிப் பருவம் (விடியற்காலப் பணி) மாசி, பைங்குனி - பின்பணிப் பருவம் (அந்திப் பணி) ,

இவ் ஆறு பருவங்களில் இளவேனில் பருவம் தமிழகத்து வாழ்வியலுக்கு இனிமையான இன்பப் பருவம். இக்காலத்தில் இப்பருவம் இரு திங்கள் தள்ளி மாற்றமடைந்துள்ளது. ஆனால், கீழை நாடாம் மலைநாட்டில் இன்றும் இளவேனிலாகச் சித்திரை, வைகாசி அமைந்துள்ளன. இளவேனில் அல்லாத பிற பருவங் கள் வாழ்வில் ஒவ்வொரு வகையில் இடையூறு தருவன. அவ்விடையூறுகளைக் குறைத்து நலமாக்கும் பாங்கில் இந்த எழுநிலை மாடத்தில் மேல் ஆறு மாடங்களும் அமைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு பருவத்திற்கும் அததற்குரியதாகக் கட்டப்பட்ட மாடத்தில் உறைந்து வளமான - நலமான பயன் துய்த்தனர். எல்லாப் பருவகால வாழ்வையும் சுவையுடையதாகவே வைத்துக் கொண்டனர்.

அழிவற்ற மிகப்பெரும் செல்வம் படைத்தோரே இம் மாடங்களை அமைத்துக்கொண்டனர். பழந் தமிழகத்துப் பெரு நகரங்களில் இவ் வெழு நிலை மாடங்கள் பல்கி நிறைந்திருந்தன. எழு நிலை மாடத்தின் பொதுவான வளங்களைத் தமிழ் இலக்கியங்கள் கொண்டு அறியலாம்.

'ஏழுயர் மாட மூதூர்' -என்று பாடினார் வில்லிபுத்துரார். அழகின் அணிகலமாய் அமைந்த எழுநிலை மாடம் நல்ல கலைத் தொழிலுடன் விளங்கியது. மேல் மாடங் களிலேயே நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைக் கொங்குவேளிர் என்னும் குறுநிலமன்னர்,

1 'காரே கூதிர் முன்பணி பின்பணி

சீரிள வேனில் வேனி லென்றாங்கு இரு மூ வகைய பருவம்; அவைதாம், ஆவணி முதலா இவ்விரண் டாக மே.வின திங்கள் எண்ணிச் கொளலே அணியியல் நூற்பா, 2 வில். பா : நிரைமீட்சி ; 118