பக்கம்:புதையலும் பேழையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - - 188

முதுவேனிற் பருவம் தொடங்க உள்ளது. மாடத்தின் ஒவ்வொரு நிலமும் சிறந்த படுக்கையறைகள் அமைந்த பள்ளியறை கொண் L-35/- அதனால், அவ்வந் நிலம், அவ்வப் பருவத்துப் பள்ளியறையாக - பள்ளியாகக் குறிக்கப்பட்டது. கோவலன் கூடாது பிரிந்தபின் மாதவி எழுநிலை மாடமாகிய,

"வானுற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி னாளாம்.1

-இங்கு இளவேனில் பருவத்தில் தங்கும் நான்காம் நிலம் வேனிற் பள்ளி'எனப்பட்டது. பருவத்திற்கேற்ப மாடிகள் அமைக்கப்பட்டதை இவ்வடிகளுக்கு எழுதிய உரையில் அடியார்க்குநல்லார் பின்வருமாறு புலப்படுத் தியுள்ளார்:

'பருவத்திற்குப் பொருந்த வானிலேயுற உயர்ந்த மேனிலையில் (மாடியில்) ஒருபக்கத்து நிலாமுற்றத்தே யேறி’

இவ்விளக்கம் நோக்கத்தக்கது. பருவத்திற்கு ஏற்ற பாங்குடன் அடுக்குகள் அமைந்தன என்பதை அறிய இவ்வுரை விளக்கமே ஒளி காட்டுகின்றது. இவ் ஒளிகாட்டும் வெளிச்சத் துடன் தொடர்ந்து பருவ அடுக்குகளைக் காண முடிகின்றது.

அடுத்து,

முன்னே, கண்ணகியும் கோவலனும் நெடுநிலை மாடத்தில் இடை நிலமாம் நான்காவது நிலத்தில் இருந்தவர்கள் அங்கு புகுந்த தென்றலைச் சுவைத்துக் காம உணர்ச்சி மேலீட்டால்,

விரைமலர் வாளியொடு வேனில்விற் றிருக்கும்

நிரைநிலை மாடத்து அரமியம்”

- (நிலாமுற்றம்) ஏறினார்கள் என்று குறிக்கப்படுவதால் இளவேனிற் பள்ளிக்குமேல் நிலா முற்றம் அமைந்த முதுவேனிற் பள்ளி நிலத்தில் ஏறியதாகும். இதன் உரையும்,

1. சிலம்பு : 8 :17, 18. 2 சிலம்பு : 2 : 26, 27.