பக்கம்:புதையலும் பேழையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 143.

கதவின் அமைப்போ தனிக் கலை கொண்டது. கதவின் பிடிகுவளை மொட்டுப்போல அமைந்து, பொன்பூண் கட்டப்பட்டு, மாணிக்கம் பதிக்கப்பட்டது. கதவின் துளைகள் மலர்க் கொடிப் பாங்கில் மலர்ந்து விளங்குகின்றன.

அறையின் நடுவே வட்டமான கட்டில் கிடக்கிறது. அதன் அமைப்பையும் தன்மையையும் கூர்ந்து நோக்க வேண்டும்.

"மழமழ வென்று திரண்டு வெண்மையாக விளங்கும் கட்டில் கால்களைக் கூர்ந்து நோக்குக! தனக்குச் சமமான களிற்றுடன் போர்க்களத்தில் பொருது வெற்றிபெற்றதாய் நாற்பது ஆண்டு அகவையுடைய களிற்றினது தந்தத்தால் செய்யப்பட்டவை அக் கால்கள். அத்தந்தங்களும் களிற்றிலிருந்து வெட்டி எடுக்கப்படா மல் தாமே விழுந்தபின் பயன்பட்டவை. கட்டிலின் சட்டமெல்லாம் முன் குறிக்கப்பட்டமை போன்ற தந்தத்தில் கடையப்பட்டவை. அச்சட்டங்களின் மேல் புலித்தோல் உறையாக இணைத்துத் தைக்கப்பட்டுள்ளது. கால்களின் அடிப்பகுதிகள் மகளிரது பால் நிறைத்த கொங்கைகள் போன்று குடங்களையும், அவற்றின் கீழே உள்ளி போன்ற குமிழையும் கொண்டவை. சுற்றிலும் அழகாகத் தோன்றும் மிகச்சிறிய முத்துகள் கோக்கப்பட்ட தொங்கல்கள் தொங்கி அசைகின்றன. பொன் தகட்டால் இலை, கொடி, பூத் தொழில்கள் செய்யப்பட்டுள்ளன. அரிமா வேட்டை போன்ற உருவங்கள் மயிர்கொத்தால் வடிாக்கி அமைக்கப்பட்டுள்ளன. காலின் குடங்களில் மார்புக் கச்சு போன்று தைக்கப்பட்டுள்ளமை யால் இதற்குக் 'கச்சுக் கட்டில்’ என்றும் பெயர். பாண்டில்’ 'வட்டக்கட்டில்’ என்றும் இக்கட்டிலை வழங்குவர். தச்சினார்க் கினியர் இக்கட்டிலை,

"பொலிவுபெற்ற நிறத்தையுடைய கச்சாலே நடுவுவெளி யான இடம் மறையும்படி கோக்கப்பட்டுக் குற்றமற் று கச்சுக்கட்டில்’ என்னும் பெயரையுடைய பாண்டில்’ - -

-என விளக்கினார்.

ஆண்டாள் கோட்டுக்காற் கட்டில்’ (திருப்பாவை: 19) என்று பாடினாள். .

இத்தகைய கலையும் பெருமையும் நிறைந்த கட்டிலின் மேல் போடப்பட்டிருந்த மெத்தை அடுக்கு காணத்தக்கது.