பக்கம்:புதையலும் பேழையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

உள்ளன. வெண்மை ಅಹಡಿ Tಣ6ು ಹGr @ಣ6ು. 'தமிால மாலை' என்று கூறப்படும் பச்சிலை மாலைகள் உள்ளன.

இவ்வடுக்குக்கு வாயில் ஒருபுறத்திலேயே உள்ளது. இடமும் குறுகியுள்ளது. மேல் தரம் ಡಿ-ನುಡಿ, ದಿ வளைந்த ஒட்டுகள் கூடிய மண்டபமாக உள்ளது. முகப்பில் சுதையால் ஆக்கப்பட்ட கலைத்தொழில் அழகூட்டி விளங்குகிறது. தளத்தின் இல் இருபுறமும் சிறு கோபுர அமைப்பு உள்ளது.

அன்னோர் உதடு வெடிக்காமல் உள்ளேயே உறங்குக, அன்னோர்’ வாழ்க! இப்பெருமனையாம் எழு நிலை மாடத்தை வாழ்வியற் கலைப் பெருங்கூடமாக ஆக்கிய தமிழினம் வாழ்க

என்று இம்மேல்நிலையில் நின்று வாழ்த்துவோம்.

மலையடிவாரத்தில் தவழத் தொடங்கிய இக்கட்டுரை மலை முகடு போன்ற மாடத்தில் நிறைவேறுகின்றது.

முற்கால இலக்கியச் சான்றுகளுடன் காணப்பட்ட இவ்வெழு நிலை மாடத்தை மறுமுறையும் மனக்கண்ணால் கண்டு, இக் கால வானுயர் வளமனைகளுடன் கூர்ந்து நோக்கி, உண்மை, நலம் கண்டு ஒப்பிட்டால் பழந்தமிழ்க் கலை உயர்ந்து விளங்கு வது புலனாகும்.

இங்கே ஒன்றைக் குறித்தல் வேண்டும். தமிழ்நலம் கருதும் தமிழ்நாட்டரசு சிலப்பதிகாரத்தின்பால் நெஞ்சார்ந்த காதல் கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களை முதலமைச்சராகப் பெற்று அடைந்த பேறுகள் பல. அவற்றுள் ஒன்று பூம்புகாரில் எழுப்பப்பட்டுள்ள பூம்புகார்க் கலைக்கூடம், அதன்கண் கால மெல்லாம் நிலைத்திருக்குமாறு சிலம்புக் காட்சிகள் கற்சிற்பங் களாக வடிக்கப்பட்டுள்ளன. இஃது ஒர் இலக்கியக் கற்கூடமாகும். இந்நிலையில் இது உலக முதல் அமைப்பு என்னலாம். ஓர் இலக்கியத்திற்கு முழுமையான கற்கலைக்கூடமாக எழுந்துள்ள இது உலகத்தில் முதலாவது.

இப்பூம்புகார்க் கலைக்கூடத்தின் முகப்பு, நான் இங்கே கண்டறிந்து விளக்கிய எழுநிலை மாட முகப்பாக எழுந்து நின்று, தமிழனின் கட்டடக் கலையைக் காட்டிக் கொண்டுள்ளது.

அது இம்முத்திரைக் கட்டுரையின் சித்திரக் கல்வெட்டு: