பக்கம்:புதையலும் பேழையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மூலப் பின்னணி. - §

நினைப்பென்னும் நெடுங் கிணறு.

வீரன் மார்பில் பெற்ற போர்ப் புண்ணை இலக்கியம் விழுப் புண் என்று பாடும். எனது ஆறாவது அகவையில் ஒரு பெரிய ஆடிக் குப்பியை அணைத்தவாறு குப்புற விழுந் தேன். மார்பில் பெரும் புண்ணாயிற்று. ஆத்திசூடி உரைகாரர் கோ. வைத்தியலிங்க னாராம் எனது தந்தையார் எனது கடைக் குட்டிப் பையன் ஒற்றில்லாத விழுப்புண் (விழு புண் - விழுந்ததால் உண்டான புண்) பெற்ற வீரன்’ என நயம்பட உரைத்தார்களாம். இலக்கியப் புலமையோடு மருத்துவப் புலமை யும் பெற்ற அவர்களே அப்புண்ணை மூலிகை மருந்து மூலம் ஆற்றியவர்கள். இவ்விலக்கியப் பேச்சும் மூலிகை மருந்தும் எனது அடிமனத்தில் அழுந்திக் கிடந்தன. புறநானூற்றில் தோயன்மாறனது போர்வடுக் களுக்கு மருந்து கொள்ளப்பட்ட மரம் போல' என்னும் இலக்கிய வடிப்பைப் படித்தபோது அடிமன நினைப்பு உரம் பெற்றது. ஞானசம்பந்தர் நினைப்பை நெடுங் கிணறு' என்றார். தமிழரசு' இதழார் தமிழ் மருத்துவக் கட்டுரை வேண்டியபோது 'நினைப்பென்னும் நெடுங் கிணற் றிலிருந்து ஊறிய நீர். 'மருந்தில் மலர்ந்த இலக்கியம்” - ஆயிற்று

வெளியீடு : 'தமிழரசு’

தி. ஆ. 2002 - சித்திரை - 17 ;1971-س 5-1