பக்கம்:புதையலும் பேழையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும். 193

இவ்வாறு மேலும் மேலும் அடுக்கி மணியைக் கோப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்.

சிலம்பின் உள்ளே மட்டும் மணி அமைந்ததோடு நின்று விடவில்லை. சிலம்பின் புறத்திலும் அச் செம்மணி அமைந் துள்ளது. இச் சிலம்பை அடிகளார் வண்ணித்துள்ளார். அச் சிலம்பு கிளிச்சிறை என்னும் பசும்பொன்னால் செய்யப்பட்டது. சித்திர வேலைப்பாடுகள் நிறைந்தது. அதன் கூடுவாய் மேடாக அமைந்தது. மேட்டில் ஒரு குழி (கேவனம்) உள்ளது. அக் குழியில்) செம்மணி பதிக்கப்பட்டுள்ளது. அம்மணி மிகச் சிறந்த தலையாய மணி (மத்தக மணி). அதனைச் சுற்றித் தாழ்வாக வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு மட்டும் குடை போன்று காட்சியளிப்பது. இவற்றையெல்லாம் அடிகளார்,

'மத்தக மணியோடு வைரங் கட்டிய

பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூழ் சித்திரச் சிலம்பு' எனப் பாடுகின்றார்.

மணிக் கண்ணகிக்கு வெற்றியளித்த சிலம்பும் அகத்தே யும் புறத்தேயும் மணியைப் பெற்று மணிச்சிலம்பாகியது.

மேலும் தொடர்ந்து கண்ணகியாரது உணர்ச்சிக் கொப்பளிப்பிற்கு இலக்கான மார்பைக் காணலாம்.

மணி மார்பு

சீற்றங்கொண்ட கண்ணகியார் மதுரையை எரியூட்ட இடது முலையைத் திருகி எறிந்தார் என்பதை அறிவோம். (இக் காலத்தில் முலை' என்னுஞ்சொல் அவையல் சொல்லாகிவிட்டமை யால் மார்பு’ என்று குறிக்கின்றோமாயினும், சில இன்றியமை யாத கருத்துகொண்டு அவ்வவ்விடங்களில் முலை' என்னும் சொல்லைக் குறிக்க நேர்கின்றது.)

அம்முலையிலும் மணி உள்ளது. இங்கேதான் மணி என்னுஞ் சொல் முடிச்சவிழ்க்குஞ் சொல்லாக அமைந்துள்ளது.

1 சிலம்பு கொலைக்களம் : 117–119

இப, 13