பக்கம்:புதையலும் பேழையும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 195

உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருள்மேல்

சித்தரிக்கப்படாது (கற்பனையாகக் கதைக்கப்படாமல்) . . பட்டாங்கு கிளந்து (-நிகழ்ந்தபடி எடுத்துச் சொல்லி) பலவினப் பாட்டால் வருதலின் ஈது அன்னது (கதை) அன்று என்பார்க்குக் காப்பியம் என்றலுமாம்”

இவ்வாறு அடியார்க்குநல்லார் குறித்துள்ளமை போன்று சிலப்பதிகாரம் பட்டாங்கு - அதாவது நிகழ்ச்சி நிகழ்ந்தபடி கூறு வதே. இஃது உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் காப்பியமேயாகும்.

அவ்வாறாயின், நம்பத் தகாதவையும், பகுத்தறிவால் ஏற்றுக்கொள்ள இயலாதவையும் ஆகிய நிகழ்ச்சிகள் வரலாறு ஆகாவே, அத்தகைய நிகழ்ச்சிகள் சிலம்பின் இடையிடையே ஒலிக்கின்றனவே” என்ற வினா எழல் இயல்பே. அந்நிகழ்ச்சிகள் ஆர ஆயத்தக்கனவே. அவற்றுள்ளும் எவை ஆயத் தக்கவை? எவை ஆய்வின்றி அமைதி கானத் தக்கவை' எனப்பகுத் பின்னரே ஆய்வில் புகவேண்டும். . . . . . . . . .

நம்பத் தகாத நிகழ்ச்சி ஒன்றை நூலிலிருந்து எடுப் பதனால் வரலாற்றுத் தொடர்பிற்குச் சிதைவு நேரு மானால், வரலாற்றுத் தொடர்பு இடையற்றுப் போகு - - மானால், வரலாறு நிறைவேறாமல் குறைபட்டுப் போகு மானால் அங்கிகழ்ச்சி ஆய்தற்கு உரியதாகும். ஏனெனில், அங்கிகழ்ச்சி இன்றிக் காப்பியம் அமையாதாகையால் அஃது இன்றியமையா நிகழ்ச்சியாகும். அவ்வாறன்றி, நம்பத்தகாத நிகழ்ச்சி ஒன்றைக் காப்பியத்தினின்றும் எடுப்பதனால் வரலாற்றுப் போக்கில் இடைவெட்டு நேராதாயின் அங்கிகழ்ச்சி ஆய்விற்கு உரியதாகாது. ஏனெனில், அந் நிகழ்ச்சி இன்றியே காப்பியம் அமை வதால் அஃது இன்றியமையும் நிகழ்ச்சியாகும்.

எனவே, ஆய்வதற்கு உரியது இன்றியமையாத நிகழ்ச்சி என்று ஆகின்றது. அவ்வாறு இன்றியமையாததாக, அதேபோது நம்பத் தகாததாகக் காணப்படும் நிகழ்ச்சியே வரலாற்று இலக் கியத்தில் சிக்கலை உண்டாக்கி முடிச்சுவிழச் செய்வதாகும்,