பக்கம்:புதையலும் பேழையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 197

மண்டிய போரினில் என் மகன் புறங்காட்டினன் ஆயின் அவன் பால்,

" ..................... உண்ட என்

முலையறுத் திடுவன் யான்' என்றாள்.

அச்செய்தியை அறிவிப்பவர் காக்கைப்பாடினியார் நக் செள்ளையார். அவர் ஒரு பெண்பாற்புலவர் என்பது ஒரு நல்ல இயைபு ஆகின்றது. பெண் இனத்துச் செய்தி ஒன்றைப் பெண் பாலார் அறிவிப்பதுகொண்டு அதனை நடைமுறை உண்மை யாகக் கொள்ளவேண்டும். - `.

மதுரையில் வாழ்ந்த மருதன் இளநாகனார் என்பார் மார்பறுத்த செய்தி ஒன்றை அறிவிக்கின்றார்.

அயலான் ஒருவனது பழிச்சொல்லால் கவலை மனத்தை வருத்த, "ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” என்பது அது. இது நிகழ்ந்த இடம் வயற்பகுதி என்று இந்நற்றினைப் பாடல் குறிப்பதால் ஒருமுலை அறுத்தவள் கண்ணகி அல்லள், என்று கருதுவர். அவ்வாறாயின் மார்பைச் சிதைத்துக்கொள்ளும் செய்திக்கு இது மேலும் மற்றொரு சான்றாகின்றது. கண்ணகி யையே குறிப்பதாயின் கருத்து உறுதிப்படுகின்றது.

பழிச்செயல் புரிந்த பெண்ணைப் பழி வாங்க அவள் மார்பைச் சிதைத்துத் தண்டனை கொடுக்கப்படுவதும் உண்டு. இதனை இராமாயணக் கதை காட்டுகின்றது. இராமனிடம் தகாத முறையில் நடந்த சூர்ப்பனகையின் மூக்கொடு மார்பை இலக்குவன் சிதைத்த செய்தியைக் காண்கின்றோம். - -----

மேலும், பகை காரணமாகப் பழிசெய்ய முனைவோர் பகை

வரது ஆவினங்களின் மார்பைச் சிதைத்ததைப் புறநானூறு கூறு கின்றது. அறமல்லாத கொடிய செயல்களைப் பட்டியலிடும்

புறநானு று, л. ... - .

"ஆன்முலையறுத்த அறனில்லோர்' என்று குறிக் கின்றது. பிற்காலத்து நூலான நீதிநெறி விளக்கமும்,

புறம் : 279 : 4, 5, 3 புறம் : 34 : 1. 2 நற் : 216 : 9 ‘. . . .