பக்கம்:புதையலும் பேழையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 218

இப்பாடலைக்கொண்டு நோக்கும்போது இக்காலச் சிறுவன் செயலைப் பண்டை நிகழ்ச்சியின் பழக்க நிழல் எனலாம். அத்துடன்,

"இலக்கியம் இட்டுக் கட்டுவது அன்று;

இயற்கையின் வண்ணப் பதிப்பே'

- எனவும் குறிக்கத் தோன்றுகின்றது.

இக்காட்சியைக் கண்ட எனக்கு நாமும் இவ்வாறு எண்ணிப் பார்க்க வேண்டும்’-என்னும் ஒர் எளிய அவா பிறந்தது. கரையிலிருந்தன்று கலத்திலிருந்து, கரைப்பகுதியில் தெரியும் விளக்குகளை எண்ணவேண்டும்' - என்னும் அவர் எழுந்தது. இவ்வவாவைப் பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் உள்ளத்தில் வந்து நின்று துண்டினார்:

‘பூம்புகார் நகரில் மாடிக் கட்டடங்கள் உயர்ந்த நெடிய துரண்களோடு விளங்குகின்றன. அம்மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு எரிகின்றன. வங்கக் கடலில் வளைந்த படகுகளில் மீன் பிடித்துத் திரும்பும் பரதவர் அந் நன்னிற விளக்குச் சுடர்களை நோக்கி எண்ணிப் பொழுது போக்கியவாறே வருகின்றனர்:

. -இக்காட்சியைக் கண்டிருக்கிறார் உருத்திரங் கண்ணனார். அதனை,

நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்

கொடுந்திமில் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்'

-எனப் பாடினார். இவ்விலக்கியத்தை எண்ணத்தில் சுவைத்த யான் எண்ணியும் சுவைக்கக் கருதினேன். இதற்குரிய வாய்ப்பு. திருவள்ளுவர் ஆண்டு 1997-சித்திரை-நான்காம் நாளுக்கு நேரான 16-4-1966-இல் கிட்டியது.

அந்நாள் யான் என் மலைநாட்டுப் பயணத்தை மேற்

கொண்ட நாள். பினாங்கு எழுத்தாளர் மன்றத்தாரது அன்ப ழைப்பை ஏற்றுப் புறப்பட்ட நாள். அத்திங்களில் கோலாலம்பூரில்

1 பட், பா : 111, 112.